
படியில் உருண்டு விழுந்த புதின்.. நீல நிறத்தால் மாறிய கைகள்! ரஷ்ய அதிபர் மாளிகையில் பெரும் குழப்பம்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இப்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
உலகின் அதிக அதிகாரங்களைக் கொண்ட தலைவர்களில் ஒருவராக ரஷ்ய அதிபர் புதினும் உள்ளார். ரஷ்யா அதிபராக உள்ள இவர், கிட்டதட்ட சர்வாதிகாரி போலவே தான் செயல்பட்டு வருகிறார்.
கடந்த 2000ஆம் ஆண்டு அதிபராக முதல்முறையாகத் தேர்வான புதின், அப்போது முதலே அதிகாரத்திலேயே இருந்து வருகிறார். அங்கு எதிர்க்கட்சிகளையும் கூட அழித்துவிட்டார் என்றே சொல்லாம்.
"நடுங்கிய புதின்.." நீல நிறத்தில் மாறிய கைகள்.. ரஷ்ய அதிபருக்கு என்ன ஆச்சு! கவனிக்கும் உலக நாடுகள்

புதின்
ரஷ்ய மக்களிடையே செல்வாக்கு குறைந்தாலும் கூட அதையெல்லாம் பற்றி எல்லாம் புதின் கவலைப்படுவது இல்லை. அதேபோல தேர்தல் சமயங்களில் ரஷ்யாவில் முறைகேடுகளும் சாதாரணம். இப்படித் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் புதினுக்கு இந்தாண்டு ரொம்பவே மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. உக்ரைன் மீது போரை ஆரம்பித்த புதின், சில நாட்களில் உக்ரைனை தங்களுடன் இணைத்துவிடலாம் என்று திட்டம் போட்டார். இருப்பினும், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவே ஏற்பட்டது.

மோசம்
பல மாதங்களாகத் தொடரும் உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் போரில் இப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார் புதின். அதன் பின்னரும் கூட புதின் எடுக்கும் முடிவுகள் அவரது செல்வாக்கை அதிகரிக்கவில்லை. இதற்கிடையே அவரது உடல்நிலை பாதிப்புகள் குறித்தும் கூட தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. அவருக்கு கேன்சர் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தாண்டு பாதிப்பு மோசமானதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

விழுந்தார்
இது தொடர்பாக அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் ரஷ்யாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கிடையே இந்த வாரம் ரஷ்ய அதிபர் திடீரென மயங்கி விழுந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அதிகாரப்பூர்வத்தில், புதின் திடீரென படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்ததாகவும் இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் முன்னாள் உளவாளி ஒருவர், தனது டெலிகிராம் பக்கத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

உருண்டு விழுந்த புதின்
70 வயதான புதின், ஐந்து படிகள் உருண்டு வந்து கீழே விழுந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அருகிலேயே பாதுகாவலர்கள் இருந்ததால், அவர்கள் உடனடியாக விரைந்து வந்து புதினுக்கு உதவினர். இருப்பினும், அவருக்கு ஏற்கனவே வயிறு மற்றும் குடலை பாதிக்கும் கேன்சர் உள்ளதால் இப்படி படிக்கட்டில் இருந்து விழுந்தது, அவரது உடல்நிலையை மோசமாகப் பாதித்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. அவரது கேன்சர் பாதிப்பு தொடர்ந்து மோசமாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், இப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

என்ன நடந்தது
இது தொடர்பாக அந்த டெலிகிராம் பக்கத்தில், "அங்கிருந்த மூன்று பாதுகாவலர்கள் உடனடியாக புதினை காப்பாற்றினர். அவர்கள் அருகே உள்ள படுக்கைக்கு புதினை அழைத்துச் சென்றனர். இதையடுத்து உடனடியாக சில மருத்துவர்கள் ரஷ்ய அதிபர் மாளிகைக்கு விரைந்தனர். புதினை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கீழே விழுந்ததில் அவருக்கு மோசமான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டனர். மேலும், இரவு முழுக்க புதின் உடல்நிலையை அவர்கள் தீவிரமாகக் கண்காணித்தனர்.

மருத்துவர்கள்
அவரால் தானாக எழுந்து நடக்கவும் கூட முடிந்துள்ளது. இருப்பினும், வயிற்றின் அடிப்பகுதியில் வலி தொடர்வதால் அவருக்கு இன்னுமே ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது. புதின் உடல்நிலை மோசமாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கேன்சர் பாதிப்பால் புதின் சில ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என்றும் இதன் காரணமாகவே தனது அகண்ட ரஷ்யா என்ற கனவை நினைவாக்க அவர் உக்ரைன் மீது போரை ஆரம்பித்ததாகவும் சில வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

நீல நிறம்
முன்னதாக கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் சந்தித்த போது, புதின் கைகள் நீல நிறத்தில் மாறி இருந்தது. அதேபோல கடந்த மாதம் புதின் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட படங்களில் அவரது கைகளில் வித்தியாசமாக இருந்தது. அவரது கைகளில் ஊசி குற்றப்பட்டதற்கான தழும்புகள் கருப்பு நிறத்தில் இருந்தது. இதுவும் கூட இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் அது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையின் போது, நேரடியாக நரம்பிற்கு மருந்துகளை (IV) அளிக்கும் முறையால் ஏற்பட்ட டிராக் மார்க் என்று வல்லுநர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.