ஜஸ்ட்டு மிஸ்ஸில் தப்பிய புதின்! வீட்டை குறி வைத்து தாக்குதல்.. உக்ரைன் ஆட்டம் ஓவரா போகுதே!
மாஸ்கோ: உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த உலக நாடுகள் முயன்று வருகின்றன. இப்படி இருக்கையில், நேற்று ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் அருகே, உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியிருப்பது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
புதின் ஓய்வெடுக்கும் பகுதியில் ஒன்றுதான் நோவ்கோரோட். இது மாஸ்கோவுக்கும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது. எழில் கொஞ்சும் பகுதி என்பதால் இங்கு புதினின் இல்லம் ஒன்று இருக்கிறது. இந்த இலத்தின் அருகில்தான் தாக்குதல் முயற்சி நடந்திருக்கிறது.

ட்ரோன் மூலம் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. டிச.28-29 தேதிகளுக்கு இடையில் மொத்தம் 91 ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்யா கூறியிருக்கிறது. இந்த சம்பவம் புதின் மீதான பயங்கரவாத மற்றும் தனிப்பட்ட தாக்குதல் என்று விமர்சித்திருக்கும் ரஷ்யா, சுட்டு வீழ்த்தப்பட்ட ஒவ்வொரு ட்ரோனிலும் சுமார் 6 கிலோ வெடிபொருள் இருந்தது என்றும் கூறியிருக்கிறது.
இந்த தாக்குதலுக்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறும் ரஷ்ய பாதுகாப்புத்துறை, தாக்குதல் நடந்த நேரத்தில் அங்கு புதின் இருந்தாரா? என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக தெரிவிக்க மறுத்துள்ளது.
மறுபுறம் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். இத ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும் அவர் கூறியிருக்கிறார். போர் நிறுத்தம் குறித்த அமைதிப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, அதை கெடுக்கவே ரஷ்யா இவ்வாறு நாடகம் நடத்துகிறது என்று விமர்சித்துள்ளார். தங்கள் நாட்டின் மீது பெரிய அளவில் தாக்குதலை நடத்த ரஷ்யா போடும் திட்டம் இது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசி இருந்தார். இந்த சந்திப்பையடுத்து இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. தாக்குதல் குறித்து புதிய தனி இடம் பேசியதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அமைதி ஒப்பந்தம் 95 சதவீதம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் புதிய சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை தன்மையை ரஷ்யா மாற்றும் என்றும், சில இலக்குகளை தாக்குவதற்கு ரஷ்யா தயாராகி விட்டது என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் பதற்றம், தங்கம் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, வேலையிழப்புகள் போன்றவற்றிக்கு இந்த போரும் முக்கியமான ஒரு காரணமாகும். போரை நிறுத்துவது, இயல்பு நிலையை கொண்டுவருவது என்பது அனைத்து நாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி. இப்படி இருக்கையில், போரை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக புதின் மீது தாக்குதல் முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம், இனி வரும் நாட்களில் போர் உச்ச கட்டத்தை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications