Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

50 ஆண்டுகள் ஆச்சு! ரஷ்யாவில் நடந்த சம்பவம்.! சந்திரயான் 3ஐ ஓவர்டேக் பண்ணுதே.. கவனிக்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நிலவு குறித்த ஆய்வு செய்ய ரஷ்யா சாட்டிலைட் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் மாறி மாறி பல ஏவுகணைகளை அனுப்பின. மனிதன் நிலவில் முதல் கால் வைத்தது எல்லாமே அப்போது நடந்தவை தான்.

 Russia resumes its Moon exploration nearly after 50 years

அதன் பிறகு நிலவு குறித்து பெரியளவில் எந்தவொரு ஆய்வுகளும் நடக்காமலேயே இருந்தது. இதனிடையே சமீப காலமாக மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. உலக நாடுகளின் கவனம் மீண்டும் நிலா பக்கம் திரும்பி இருக்கிறது.

நிலவு: இப்போது நிலவு குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக வரிசையாகப் பல சாட்டிலைட்கள் விண்ணில் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஷ்யா மீண்டும் நிலவு குறித்து ஆய்வு செய்ய ராக்கெட் ஒன்றை அனுப்பியுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு உலக நாடுகள் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தியதால் அந்நாட்டுச் சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த சாட்டிலைட் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

லூனா-25 என்ற சாட்டிலைட் இப்போது அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்யா இதற்கு முன்பு சோவியத் ஒன்றியமாக இருந்த போது நிலவு குறித்து அவர்கள் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகளைச் செய்திருந்தனர். இப்போது மீண்டும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா அதையே கையில் எடுத்துள்ளது. 1976க்குப் பிறகு ரஷ்யா நிலவுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும்.

ரஷ்யா: லூனா-25 விண்கலத்துடன் கூடிய இந்த ராக்கெட் மாஸ்கோ நேரப்படி அதிகாலை 02:10 மணிக்கு வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து விண்ணில் பாய்ந்தது. இப்போது வரை இந்த ராக்கெட் திட்டமிட்டபடியே பயணித்துக் கொண்டிருக்கிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் லூனா-25 சாட்டிலைட் இன்னும் ஐந்து நாட்களில் சந்திரனின் சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாட்டிலைட் அடுத்த ஒரு ஆண்டிற்கு அங்கு இருந்த ஆய்வுகளைச் செய்யும்.. நீண்ட கால ஆய்வுகளை நடத்துவதற்காகவே இந்த சாட்டிலைட்டை அனுப்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த சாட்டிலைட் ரஷ்யாவின் புதிய சந்திர ஆய்வு திட்டத்தில் முதல் பகுதியாக இருக்கும். அதிலும் உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தியுள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சிக்கல்கள்: நிதி பிரச்சினை, ஊழல் எனப் பல காரணங்களால் முன்பு விண்வெளி ஆய்வில் கொடி கட்டி பறந்த ரஷ்யா இப்போது பெரிய சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இது தவிர அமெரிக்கா மற்றும் சீனா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களும் இப்போது ஸ்பேஸ் ஆய்வில் இறங்கியுள்ளன. இந்த கடும் போட்டிக்கு மத்தியில் தான் ரஷ்யா இந்த ராக்கெட்டை அனுப்பியுள்ளது.

 Russia resumes its Moon exploration nearly after 50 years

இந்த ராக்கெட் அடுத்த 5 நாட்களில் நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைய உள்ளது. பின்னர் நிலவில் எங்குத் தரையிறங்கலாம் என்பதைத் தேர்வு செய்ய அங்கேயே 3 முதல் 7 நாட்கள் இது ஆய்வு செய்யும்.. அதன் பின்னரே இது நிலவின் தென் துருவப் பகுதியில் இறங்கும். இப்போது வரை நிலவில் தரையிறங்கிய அனைத்து ராக்கெட்களும் நிலவின் நடுப்பகுதியில் தான் தரையிறங்கியுள்ளனர். ஆனால், முதல் முறையாக ரஷ்யாவின் இந்த சாட்டிலைட் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

முன்னதாக இந்தியா அனுப்பி சந்திரயான் 3 விண்கலனும் இப்போது நிலவைச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. இம்மாத இறுதியில் அது நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற சாதனையைச் சந்திரயான் 3 படைக்க இருந்த நிலையில், தான் இப்போது ரஷ்யாவின் இந்த ராக்கெட் அதை ஓவர்கேட் செய்ய உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+