For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நிலம், நீர், காற்று.." அணு ஆயுதங்கள் குறித்து புதின் போட்ட திடீர் உத்தரவு! கவனிக்கும் உலக நாடுகள்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், ரஷ்ய அதிர் புதினின் செயல்பாடுகள் உலக நாடுகளைக் கவனிக்க வைத்து உள்ளது.

கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் பல மாதங்களைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த போர் இரு நாடுகளை மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் கடுமையாகப் பாதித்து உள்ளன.

இந்த போர் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் போரைக் கைவிட்டால் அது தனக்கு அவமானம் என்று கருதுகிறார் புதின். இதுவே போர் தொடர காரணமாக உள்ளது.

இந்தியவை கொள்ளையடிச்சு.. ரஷ்யாவை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்! மேற்கத்திய நாடுகளை விளாசிய புதின்! இந்தியவை கொள்ளையடிச்சு.. ரஷ்யாவை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்! மேற்கத்திய நாடுகளை விளாசிய புதின்!

 ரஷ்யா அதிரடி

ரஷ்யா அதிரடி

இடையில் சில வாரங்கள் போர் நடவடிக்கைகளை எதுவும் பெரியளவில் இல்லாமல் இருந்தது. இதனால் உக்ரைன் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தனர். இந்தச் சூழலில் புதின் மீண்டும் போர் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி உள்ளார். அதன்படி முதற்கட்டமாகப் போரில் கைப்பற்றிய பகுதிகளை அவர் அதிகாரப்பூர்வமாக ரஷ்யா உடன் இணைத்தார். இது உக்ரைனுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

புதின்

புதின்

மேலும், அணு ஆயுதங்கள் தொடர்பாகவும் புதின் பேசத் தொடங்கினர். இது உலக நாடுகளையே கவனிக்கச் செய்தது. இனியும் புதின் சொல்வதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. முழு வீச்சில் போரைத் தொடங்க வாய்ப்பே இல்லை என்று வல்லுநர்கள் கூறிய நிலையில், அதையெல்லாம் அப்படியே புறம் தள்ளிவிட்டு போரை ஆரம்பித்தவர் தான் புதின். எனவே அவரது நடவடிக்கைகளை உலக நாடுகள் உற்றுக் கவனித்து வருகின்றனர்.

 ஆணு ஆயுதங்கள்

ஆணு ஆயுதங்கள்

இந்தச் சூழலில் ஆணு ஆயுதங்கள் தொடர்பாக வெறும் பேச்சுடன் நிற்காமல் ஆணு ஆயுத போர் ஒத்திகைக்கும் உத்தரவிட்டார். கடந்த புதன்கிழமை அங்கு அணு ஆயுத போர்ப் பயிற்சி நடைபெற்ற நிலையில், அதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடியாகவே கண்காணித்தார். ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் மற்றும் ரஷ்யா இடையே பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், இந்த அணு ஆயுத போர்ப் பயிற்சி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 போர் பயிற்சி

போர் பயிற்சி

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு நியாயப்படுத்தி உள்ளார். ரஷ்யா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். இந்த ராணுவ பயிற்சியில், ​​கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை மூலம் ரஷ்ய வீரர்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 நிலம், நீர், காற்று

நிலம், நீர், காற்று

ரஷ்யாவின் ராணுவம், கடற்படை, விமானப்படை என்று மூன்றுமே இதில் ஈடுபட்டது. ரஷ்யக் கடற்படையும் சினேவா ஐசிபிஎம் என்ற ராக்கெட்டை பேரண்ட்ஸ் கடலில் இருந்து ஏவியது. மேலும், ரஷ்ய விமானப்படை விமானங்களும் இந்த பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் அங்கு மீண்டும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டு உள்ளது. ரஷ்ய ராணுவம் அணு ஆயுதப் பயிற்சிகளை நடத்தியுள்ள நிலையில், தனது எல்லையைக் காக்க ரஷ்யா அனைத்து வகையான நடவடிக்கையையும் எடுக்கும் என்று புதின் கூறியதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. போர்ப் பயிற்சி சிறப்பாக நடந்து முடிந்ததாக ரஷ்யா தெரிவித்து உள்ளது.

 உலக நாடுகள்

உலக நாடுகள்

இது குறித்து அமெரிக்காவும் விளக்கத்தைக் கொடுத்து உள்ளது. அதாவது, "இது ரஷ்யாவின் வழக்கமான வருடாந்திர பயிற்சி தான். இதை ரஷ்யா திடீரென ஆத்திரமூட்டும் நடவடிக்கை அல்லது அணு ஆயுத அட்டாகில் ஈடுபடுவதாக நாம் நினைக்கத் தேவையில்லை. ரஷ்யா ஏற்கனவே இது தொடர்பாக எங்களிடம் தெரிவித்து விட்டது" என்று கூறியுள்ளது.

English summary
President Vladimir Putin monitored Russia's nuclear forces drills: Russia conducts military drills, amid Ukraine war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X