Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் ஒரு உயிர்கொல்லி நோய் : இம்முறை கொசு வடிவில்: ரஷ்யா எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ : கொரோனாவை தொடர்ந்து மேற்கு நைல் வைரஸ் (WNV) நோய்த்தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

தற்போது நிலவும் லேசான வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு காரணமாக கொசுக்களுக்கு சாதகமான நிலைமை உருவாகி உள்ளது. அதனால் தோன்றும் மேற்கு நைல் வைரஸ்களால் மீண்டும் ஒரு உயிர்கொல்லி நோய் அதிகரிக்கும் என்று ரஷ்யா அலார்ட் செய்துள்ளது.

ஏனென்றால், ரஷ்யாவின் 80% க்கும் அதிகமான மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்புகள் அதன் தென்மேற்கு பகுதியில் உறுதி செய்யப்பபட்டிருக்கிறது.

 மனிதர்களுக்கு ஆபத்து

மனிதர்களுக்கு ஆபத்து

மேற்கு நைல் வைரஸ் என்றால் என்ன? மேற்கு நைல் வைரஸ் (WNV) என்பது கொசுக்களால் பரவும் ஒரு தொற்று நோய். இது பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் தொற்றுள்ள கியூலெக்ஸ் கொசுவால் பரவுகிறது. இது மனிதர்களுக்கு ஆபத்தான நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு வழிவகுக்கும். உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட தகவலின் படி, இந்த வைரஸ் சுமார் 20 சதவீத பேருக்கு மேற்கு நைல் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இது ஜிகா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் வைரஸ்களை போன்று அபாயகரமானது.

காய்ச்சல்

காய்ச்சல்

மேற்கு நைல் வைரஸ் தொற்றின் (WNV) இன் அறிகுறிகள் என்ன? மேற்கு நைல் வைரஸ் (WNV) தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு பொதுவாக அறிகுறிகள் அல்லது லேசான அறிகுறிகள் இருக்காது. அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தோல் வெடிப்பு மற்றும் வீங்கிய நிணநீர் சுரப்பிகள் ஆகியவை அடங்கும். அவை சில நாட்கள் முதல் பல வாரங்கள் வரை நீடிக்கும், பொதுவாக அவை தானாகவே போய்விடும்.

 வைரஸ் தோற்றம்

வைரஸ் தோற்றம்

மேற்கு நைல் வைரஸ் எங்கிருந்து தோன்றியது? உலக சுகாதார அமைப்பு (WHO) கூற்றுப்படி, WNV என்று அழைக்கப்படும் மேற்கு நைல் வைரஸ் முதன்முதலில் 1937 இல் உகாண்டாவின் மேற்கு நைல் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் இருந்து பரவியது. இது 1953 இல் நைல் டெல்டா பகுதியில் உள்ள பறவைகளில் (காகங்கள் மற்றும் கொலும்பிஃபார்ம்ஸ்) இருந்து வந்ததாக அடையாளம் காணப்பட்டது.

1997 க்கு முன், மேற்கு நைல் வைரஸ் பறவைகளுக்கு நோய்க்கிருமியாக கருதப்படவில்லை, ஆனால் அந்த நேரத்தில் இஸ்ரேலில் மிகவும் தீவிரமான திரிபு மூளைக்காய்ச்சல் மற்றும் பக்கவாதத்தின் அறிகுறிகளுடன் பறவைகள் செத்து மடிந்தன. இந்நிலையில் மேற்கு நைல் வைரஸ் காரணமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல நாடுகளில் மனிதர்களுக்கு நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 மூளைக்கு ஆபத்து

மூளைக்கு ஆபத்து

மேற்கு நைல் வைரஸ் எப்போது மனிதர்களுக்கு ஆபத்தானது? மேற்கு நைல் வைரஸ் மூளைக்குள் நுழைந்தால், அது உயிருக்கு ஆபத்தானது. இது மூளை வீக்கம், மூளையழற்சி அல்லது மூளை மற்றும் முதுகெலும்பைச் சுற்றியுள்ள திசுக்களின் வீக்கம் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்

 சோதனை முறைகள்

சோதனை முறைகள்

ஒருவருக்கு எப்படி மேற்கு நைல் வைரஸ் பரவி உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? உடல் பரிசோதனை, மருத்துவ பரிசோதகைள் மற்றும் ஆய்வக சோதனைகள் மூலம் நைல் வைரஸ் பரவி உள்ளதை கண்டறியலாம்.

 வயதானவர்கள்

வயதானவர்கள்

மேற்கு நைல் வைரஸ் தொற்றால் யார் ஆபத்தில் உள்ளனர்? வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மேற்கு நைல் வைரஸ் தொற்றால் மிகவும் ஆபத்தில் உள்ளனர்.

 தடுக்க சிறந்த வழி

தடுக்க சிறந்த வழி

என்ன சிகிச்சை? மனிதர்களுக்கு பரவும் மேற்கு நைல் வைரஸ் நோய்க்கு குறிப்பிட்ட தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் இல்லை. கொசு கடிப்பதைத் தடுப்பதே மேற்கு நைல் வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. neuro-invasive என்ற சிகிக்சை மேற்கு நைல் வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு ஓரளவு பலன் தருகிறது. வழக்கமான மருந்துகள் நோய் தொற்றால் உருவாகும் இரண்டாம் நிலை பாதிப்புகளை குறைக்க உதவும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மிதமான வெப்பநிலையால் மேற்கு நைல் வைரஸ் போன்ற நோய்கள் அதிக அளவில் பரவ காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+