பிளான் காலி! ஒரு இன்ச் கூட நகர முடியாமல் முடங்கியது ரஷ்ய படை.. வசமாக சிக்கும் புடின்? செம ட்விஸ்ட்!
மாஸ்கோ: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளே ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேற முடியாமல் திணறி வருகின்றன. ரஷ்ய படைகள் இடையே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
உக்ரைன் ரஷ்யா போர் தற்போது உச்சம் தொட்டுள்ளது. 80 சதவிகிதம் ரஷ்ய படைகள் உக்ரைன் உள்ளே நுழைந்துவிட்டது. அதேபோல் ரஷ்யா வான்வெளி தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி உள்ளது.
ஆனால் கடந்த 48 மணி நேரமாக உக்ரைன் படைகள் பெரிய அளவில் கீவ் நகருக்குள் முன்னேறவில்லை. கீவ்தான் உக்ரைன் தலைநகர்.

எங்கே மோதல்
உக்ரைன் தலைநகரை ரஷ்யா பிடிக்கும் பட்சத்தில் அது ரஷ்யாவின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. தலைநகர் வீழும் பட்சத்தில் மொத்தமாக மற்ற நகரங்களும் வீழ்ந்துவிடும். அதோடு அங்கு இருக்கும் ஆட்சியும் கவிழ்ந்துவிடும். ஆனால் 32க்கும் அதிகமான உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து உள்ளன. இதனால் போரில் உக்ரைன் இன்னும் வீழாமல் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

சறுக்கல்
உக்ரைன் தலைநகரில் அதிக அளவில் உக்ரைன் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரஷ்ய படைகள் முன்னேற முடியாமல் திணறி வருகின்றன. நேற்று முதல்நாள் 27 கிமீ தூரத்திற்கு ரஷ்ய படைகள் கீவ் தலைநகர் பகுதிக்கு வெளியே அணி வகுத்து நின்றன. நேற்று இது 48 கிலோ மீட்டர் தூரமாக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரஷ்யா படைகள் அணி வகுத்து நிற்கின்றன.

ரஷ்ய படைகள் முன்னேற்றம்
ரஷ்ய படைகள் இப்படி உள்ளே நுழையாமல் அணி வகுத்து நிற்க போர் தந்திரங்கள் காரணமாக கூறப்பட்டது. ஆனால் ரஷ்யாவிடம் போதிய logistics இல்லை என்பதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். அதாவது போதிய எரிபொருள், குண்டுகள், தோட்டாக்கள் இவர்களுக்கு வந்து சேரவில்லை. இதுதான் ரஷ்ய படைகள் கீவில் திணறுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உணவு இல்லை
அதேபோல் ரஷ்யா வீரர்களுக்கு போதிய உணவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் வீரர்கள் உற்சாகம் இன்றி சோகமாக காணப்படுகிறார்கள். அதோடு உக்ரைனில் கீவ் வான்பகுதியை ரஷ்யா இன்னும் கைப்பற்ற முடியவில்லை. கீழே உக்ரைன் ஏவுகணைகள் இருப்பதால் அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்பே வான்பகுதியை கைப்பற்ற முடியும். இதனால் ரஷ்யா இங்கும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது . இதனால் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன.

மோசமான பிளானிங்
மோசமான போர் திட்டங்கள்தான் ரஷ்யாவின் இந்த சொதப்பலுக்கு காரணம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. கடந்த திங்கள் கிழமை காலை உக்ரைன் தலைநகர் கீவில் நிலவிய அதே நிலைதான் இப்போதும் நிலவுகிறது. இதன் அர்த்தம் ரஷ்யா ஒரு இன்ச் கூட முன்னேறவில்லை என்பதுதான். பல பீரங்கிகள் ஒரு சொட்டு எரிபொருள் கூட இல்லாமல் முடங்கி உள்ளது.
Recommended Video

அமெரிக்க ரிப்போர்ட்
அமெரிக்க கணக்குப்படி மொத்தம் 190000 ரஷ்ய படைகளில் 80 சதவிகித படைகள் உக்ரைன் உள்ளேதான் இருக்கின்றன. ஆனாலும் உக்ரைன் உள்ளே ரஷ்ய படைகள் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதுவரை 400 ராக்கெட்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா ஒரு வாரத்தில் ஏவி இருக்கிறது. இவை பெரும்பாலும் மக்கள் வசிக்கும் இடங்கள், அரசு அலுவலகங்கள் மீது ஏவப்பட்டு உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications