உக்ரைன் அருகே விழுந்து நொறுங்கிய.. ரஷ்ய ராணுவ விமானம்! 65 பேர் சம்பவ இடத்திலேயே பலி
மாஸ்கோ: ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்ற இலியுஷின்-76 விமானம் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 65 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ஓராண்டை கடந்தும் போர் நீடித்து வரும் நிலையில், உக்ரேனிய போர் கைதிகளை ஏற்றி சென்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்தில் சிக்கியிருக்கிறது. ரஷ்யா தரப்பில் இதனை விபத்து என்று சொன்னாலும், உக்ரைன் ராணுவம்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இந்த கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக விமானம் பெல்கோரோட் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது.

பெல்கோரோட் பகுதி ரஷ்ய புவியியல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் இது இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இப்பகுதி உக்ரேனியப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளது. எனவேதான் இது உக்ரைனின் நாச வேலையாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விமானத்தில் உக்ரைன் கப்பலில் பிடிபட்ட 65 உக்ரேனிய கைதிகள் இருந்துள்ளனர். இவர்களை இடமாற்றம் செய்யவே விமானத்தில் அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுடன் விமானத்தில் ஆறு விமானப் பணியாளர்கள் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் இருந்துள்ளனர். விபத்து குறித்து விளக்கமளித்துள்ள பெல்கொரோட் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ், "விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டனர். மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான இலியுஷின்-76 ரஷ்யாவின் தனி சிறப்புமிக்க விமானமாகும். முதன் முதலில் 1970களில் பயன்பாட்டுக்கு வந்த இது, இப்போது வரை உலகின் சில நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. 5 விமான பணியாளர்கள் உட்பட 90 பேர் வரை இதில் பயணிக்க முடியும். கரடு முரடான ஓடுபாதை இருந்தாலும் கூட இதனால் தரையிறங்கவும், மேலெழும்பவும் முடியும். இப்படிப்பட்ட விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications