‛உக்ரைனில் பாதுகாப்பா பலாத்காரம் செய்யுங்க... ரஷ்ய வீரரை அறிவுறுத்திய மனைவி! பரபர ஆடியோ வெளியானது
கீவ்: உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷ்ய வீரருக்கு அவரது மனைவி அனுமதி கொடுத்தது விவகாரம் இருவரின் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் ‛பாதுகாப்பான உறவை மேற்கொள்ளுங்கள். ஆனால் அதுபற்றி என்னிடம் எதுவும் கூறக்கூடாது' என அந்த வீரரிடம் அவரது மனைவி அறிவுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுக்க துவங்கியது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி ரஷ்யா போரை தொடர்ந்து வருகிறது.
இதனால் உக்ரைனில் அப்பாவி மக்கள், வீரர்கள் பலியாகி உள்ளனர். இதேபோல் உக்ரைனின் பதிலடியால் ரஷ்யா படை தளபதிகள் மற்றும் வீரர்கள் பலியாகி உள்ளனர்.

பலாத்கார குற்றச்சாட்டு
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றி அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தான் இந்த போரின் முக்கிய நோக்கமாக உள்ளது. இது இதை ரஷ்யாவால் இன்னும் நிகழ்த்தி காட்ட முடியவில்லை. இலக்கை அடைய தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் தான் ரஷ்யா தொடர்ச்சியாக போர் குற்றம் புரிவதாக புகார்கள் எழுந்துள்ளன.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரஷ்யா கொன்று குவிப்பதோடு, உக்ரைன் பெண்களை ரஷ்ய படை வீரர்கள் மிரட்டி பலாத்காரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரஷ்ய வீரருக்கு மனைவி அனுமதி
இந்நிலையில் தான் உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷ்ய வீரருக்கு அவரது மனைவி அனுமதி வழங்கியுள்ளார். கணவன்-மனைவி இடையே நடந்த தொலைபேசி உரையாடலை இடைமறித்து உக்ரைன் பாதுகாப்பு பிரிவு கேட்டுள்ளது. இதன் 30 வினாடி ரெக்கார்டு செய்து உக்ரைன் பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

பேசியது என்ன?
இந்த ஆடியோவில் முதலில் பெண் ஒருவரின் குரல் கேட்கிறது. அதில், ‛‛'என்னிடம் எதுவும் சொல்லாதே. புரிந்துகொள்'' என பேசுகிறார். இதையடுத்து ஆண் பேசுகையில், ‛‛நான் பலாத்காரம் செய்ய வேண்டும். அதுபற்றி உங்களிடம் சொல்லக்கூடாது. அப்படித்தானே'' என கேட்கிறார். இதற்கு அந்த பெண், ‛‛ஆம்'' என சிரிக்க, ‛‛பாதுகாப்பான உறவை மேற்கொள்ளுங்கள். அதுகுறித்து எப்போதும் என்னிடம் பேசக்கூடாது'' என கூறுகிறார். இதற்கு அந்த நபர் ‛சரி' என கூறுகிறார்.
Recommended Video

பேசியது யார்?
இதுகுறித்து ஐரோப்பாவின் ரேடியோ பிரீ ஐரோப்பா, ரேடியோ லிபர்ட்டி என்ற பத்திரிகை விசாரணை நடத்தி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பேசிய ரஷ்ய வீரரின் பெயர் ரோமன் பைகோவோஸ்கி எனவும், அவரது மனைவி பெயர் ஓல்கா பைகோவ்ஸ்கயா எனவும் கூறியள்ளது. இதில் சேவஸ்தோபோல் நகரில் தற்போது ரோமன் பைகோவோஸ்கி இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் இருவரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து உக்ரைன் தரப்பில் பேசப்பட்டது. இதில் இருவரும் கணவர்-மனைவி என்பதை ஒப்புக்கொண்டனர். இருப்பினும் ஆடியோவில் இருப்பது எங்கள் குரல் இல்லை என மறுத்துள்ளனர். ஆனால் அவர்கள் 2 பேரின் குரலும், ஆடியோவில் உள்ள குரலும் ஒத்து போகிறது என உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications