போர் விமானங்களில் பறந்து.. இந்திய விமானப்படை விங் கமாண்டருக்கு இறுதி ராணுவ மரியாதை செலுத்திய ரஷ்யா!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: துபாயில் நடைபெற்ற ஏர் ஷோவில் தேஜஸ் போர் விமானத்தில் சாகசத்தில் ஈடுபட்டிருந்த, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நமன்ஷ் சியால், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரஷ்ய விமானப்படை, ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தியுள்ளது.

ரஷ்ய விமானப்படையின் 'ரஷ்யன் ஏரோபாட்டிக்' பிரிவினர் வானில் போர் விமானங்களில் பறந்து 'Missing Man Formation' முறையில், விங் கமாண்டருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

IAF Military Indian Air Force

ரஷ்ய விமானப்படையில் உயிரிழந்த வீரர்களுக்கு இப்படித்தான் அஞ்சலி செலுத்தப்படும். விமானப்படை குழுவினர் ஒரு சிறப்பு வடிவத்தில் விமானங்களை இயக்கும் போது பிரிந்த வீரரின் விமானம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு இடைவெளியை விட்டு செல்வார்கள். அல்லது விமானப்படை வீரர்களின் விமானங்கள் ஒன்றாக சேர்ந்து வானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு விமானம் மட்டும் திடீரென அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்று விடும். இது அந்த வீரர் உயிரிழந்து விட்டதை குறிக்கிறது. இதைத்தான் 'Missing Man Formation' என்று சொல்வார்கள். இந்த வகையில் தான் தற்போது ரஷ்ய விமானப்படை அஞ்சலி செலுத்தியிருக்கிறது.

கடந்த 21ம் தேதி துபாயில் நடந்த ஏர் ஷோ நிகழ்வின்போது தேஜஸ் போர் விமானத்தில், இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் சில சாகசங்களை நிகழ்த்தி காட்டினார். தேஜஸ் விமானத்தின் முழு திறமையையும் இந்த கண்காட்சியில் வெளி கொண்டுவருவது நோக்கமாக இருந்தது. அந்த வகையில் தான் பயின்ற அனைத்து விஷயங்களையும் வானில் செய்து காட்டினார். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் விங் கமாண்டர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து அவருடைய உடல் இன்று அவருடைய சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு முழு ராணுவ மரியாதை உடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

34 வயதான சியால், இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள நாகரோட்டா பகவான் வட்டத்தில் உள்ள பாட்டியால்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2009 இல் இந்திய விமானப்படையில் இணைந்தார். இவரது மனைவியும் விமானப்படை அதிகாரி ஆவார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவரது உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+