"ராக்கி பாய்".. கடலுக்கு அடியில் பெரிய கப்பல் முழுக்க.. அள்ள அள்ள தங்கம்! அதிர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
கொலம்பியா: கேஜிஎப் பார்ட் 2 படத்தின் கிளைமேக்சில்.. ராக்கி பாய் தங்கத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு கடலில் செல்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். சர்வதேச கடல் பார்டரில் அவர் செல்லும் போது.. இந்திய விமானப்படையின் ஏவுகணை குண்டுகள், கப்பலை தாக்கி அழிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
பல கோடி தங்க கட்டிகளுடன் ராக்கி பாய் கடலுக்குள் விழுவதாக.. படம் முடிந்து இருக்கும் (பார்ட் 3க்கு வெயிட்டிங்). இது வெறும் கதைதான்.. ஆனால் கிட்டத்தட்ட இதேபோன்ற சம்பவம் ஒன்று கொலம்பியா அருகே நடந்துள்ளது.

ஸ்பானிஷ் போர்
War of the Spanish Succession என்ற ஸ்பானிஷ் நாட்டு போர் 1701 - 1715 வரை நடைபெற்றது. இந்த போருக்கு முன்பாக ஸ்பானிஷ் கடற்படையில் 1698ல் சான் ஹோஸ் என்று கப்பல் இணைக்கப்பட்டது. 64 துப்பாக்கிகள் கொண்ட போர் கப்பல் ஆகும் இது. இந்த போரின் போது, தங்கம், வெள்ளி, வைரம், மாணிக்கங்களை சுமந்து இந்த கப்பல் சென்றது. பல மில்லியன் டாலர் மதிப்பிலான அலங்கார பொருட்களும் உள்ளே இருந்தன.

அழிக்கப்பட்டது
இந்த நிலையில் War of the Spanish Succession போரில் 1708ல் இந்த கப்பல் பிரிட்டிஷ் ராணுவத்தால் அழிக்கப்பட்டது. ஜூன் 8ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. கேஜிஎப் 2 போல பிரிட்டிஷ் ராணுவம் போட்ட குண்டு ஒன்று இந்த கப்பலில் விழுந்தது. அதில் தீ பற்ற.. இந்த கப்பலில் இருந்த வெடி மருந்துகள் வெடித்து, கப்பல் கடலில் மூழ்கியது. கணக்குப்படி பார்த்தால் சரியாக 314 வருடங்கள் ஆகிவிட்டது இந்த சம்பவம் நடந்து. அப்போது இந்த கப்பலும், அதில் இருந்த தங்கமும் கடலில் மூழ்கின.

கப்பல் தங்கம்
இந்த கப்பலில் இருந்த 600 பேர் இதில் பலியானார்கள். 11 பேர் மட்டுமே பிழைத்தனர். இந்த கப்பலை தேடி பலர் கடலுக்கு சென்றுள்ளனர். 300 ஆண்டுகள் இந்த கப்பல் தேடப்பட்டது. பலர் இதை தேடி போயே பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2015ல் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட போது உள்ளே ஆராய்ச்சியாளர்கள் அள்ள அள்ள அதில் இருந்து தங்கமாக வந்தது. பல லட்சம் தங்க காசுகள் அதில் இருந்து வந்தன.

வீடியோ
கடல் கொள்ளையர்களுக்கு கிடைக்காத இந்த கப்பல் 2015ல் ஆராய்ச்சியாளர்கள் குழுவிற்கு ஒரு வழியாக கிடைத்தது. இந்த நிலையில் இந்த உடைந்த கப்பலின் புதிய வீடியோவை இரண்டு நாட்களுக்கு முன் ஸ்பானிஷ் அரசு வெளியிட்டுள்ளது. அதில் கப்பல் உள்ளே இருக்கும் விலை மதிப்பு இல்லாத பொருட்கள் காணப்பட்டன. இந்த கப்பலின் பாகங்கள், விலை மதிப்பில்லாத பொருட்கள் பல இப்போதும் 3000 அடி ஆழத்தில் கடலுக்கு கீழே உள்ளன.

மீட்க முடியவில்லை
இதில் பல பொருட்களை இப்போதும் மீட்க முடியவில்லை. தற்போது இந்த தங்கத்தின் மதிப்பு அளவிடப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டின்படி இந்த தங்கம் மற்றும் ஆபரணங்களின் மதிப்பு என்ன என்று அளவிடப்பட்டுள்ளது. அதன்படி இவை மொத்தமாக 17 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயில் இதன் மதிப்பு.. 13,25,40,07,50,000 ரூபாய் ஆகும். இதில் 11 மில்லியன் தங்க காசுகள் உள்ளே இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தங்க காசும் 27 கிராம் மதிப்பு கொண்டது.

17 பில்லியன் டாலர்
அதில் 92% தங்கம். மீதம் வெள்ளி கலக்கப்பட்டு இருந்தது. அதேபோல் 11 மில்லியன் சுத்த வெள்ளி காசுகள் இதில் இருந்துள்ளன. இது போக பல ஆபரணங்கள், அலங்கார பொருட்கள், உடைகள், கண்ணாடி பொருட்கள் இருந்துள்ளன. இதன் மதிப்பு மொத்தமாக 17 பில்லியன் டாலர் என்று ஸ்பானிஷ் அரசு தெரிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் வீடியோ பச்சை மற்றும் நீல நிறத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2015ல் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டாலும், இப்போது இதன் மதிப்பு 17 பில்லியன் டாலர் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications