Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 ஆண்டுகள் கோமா.. எவ்வளவு முயன்றும் முடியல.! சவுதியின் தூங்கும் இளவரசர் காலமானார்! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' என்று அறியப்பட்டவர் இளவரசர் அல்வலீத் பின் கலீத் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்.. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர் விபத்து ஒன்றில் சிக்கிய நிலையில், கோமாவுக்கு தள்ளப்பட்டார். 20 ஆண்டுகளுக்கு மேலாக கோமாவில் இருந்த அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவருக்கு நினைவு திரும்பவே இல்லை. இதற்கிடையே 36 வயதான அவர், நேற்று ஜூலை 19ம் தேதி காலமானார்.

அரச குடும்பம் என்றாலே நமக்குப் பெரிய பெரிய அரண்மனைகளும், பிரம்மாண்ட வீடுகளுமே நினைவுக்கு வரும். அவர்களின் சொகுசு வாழ்க்கை நம்மை வியக்க வைப்பதாக இருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக அரச குடும்பத்தில் அனைவருக்கும் இதேபோன்ற வாழ்க்கை கிடைப்பதில்லை. சிலர் வெளியே சொல்ல முடியாத அளவுக்குக் கூட துயரத்தை எதிர்கொள்கிறார்கள். அப்படியொருவர் தான் சவுதி அரேபியாவின் தூங்கும் இளவரசர்.

Saudi Arabia s Sleeping Prince Alwaleed bin Khaled Dies After 20-Year Coma

தூங்கும் இளவரசர் மறைவு

கடந்த 20 ஆண்டுகளாகவே சவுதியின் 'தூங்கும் இளவரசர்' அல்வலீத் பின் கலீத் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் கோமாவில் இருந்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று காலமானார். இகு தொடர்பாக குளோபல் இமாம்ஸ் கவுன்சில் வெளியிட்ட இரங்கல் செய்திக்குறிப்பில், "அப்துல்அஜிஸ் அல் சவுத் மறைவுக்குப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார்.. ஒரு துயர விபத்தைத் தொடர்ந்து அவர் கடந்த 20 ஆண்டுகளாக அவர் போராடி வந்தார். இந்தத் துக்ககரமான சந்தர்ப்பத்தில் அரச குடும்பத்தின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

இளவரசர் கலீத் பின் தலாலும் அவரது குடும்பத்தினரும் இறைவன் மீது வைத்திருந்த ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாக இத்தனை ஆண்டுகள் பொறுமையையும் உறுதியையும் வெளிப்படுத்தினர். மறைந்த இளவரசருக்கு இறைவன் கருணை காட்டவும், அவருக்குச் சொர்க்கத்தில் இடமளிக்கவும், அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்" என்று வெளியிடப்பட்டுள்ளது.

என்ன நடந்தது

இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் லண்டனில் படித்துக் கொண்டு இருந்த போது 2005ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். அவருக்கு அங்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் பிறகு அவர் மீளவே இல்லை. இதையடுத்து அவர் சவுதிக்கு அழைத்து வரப்பட்டார். சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவமனையில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உணவுக் குழாய்

அவர் கண் விழித்தே 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியது. கடந்த 20 ஆண்டுகளாக, உணவுக் குழாய் மூலமாகவே அவர் உணவு கொடுத்து வந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டில், அவரது உடலில் இலேசான அசைவுகள் காணப்பட்டன. விரலை அசைப்பது, தலையை லேசாக ஆட்டுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் முழுமையாக நினைவு திரும்பவில்லை.

மருத்துவர் ஆலோசனை

ஏற்கனவே இளவரசர் கோமாவில் இருந்து மீண்டு வர வாய்ப்பு குறைவு என்பதால் வென்டிலேட்டரை அகற்ற மருத்துவர்கள் அரச குடும்பத்தினரிடம் ஆலோசனை கொடுத்திருந்தனர்.. ஆனால், அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் அதற்குச் சம்மதிக்கவில்லை. "கடவுள் அவன் உயிரை எடுக்க விரும்பியிருந்தால், விபத்திலேயே எடுத்திருப்பார்" என்று கூறி, வென்டிலேட்டர் உதவியை நீக்க அவர் மறுத்துவிட்டார். மருத்துவமனையிலேயே ஒரு செட் அப் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் அவர் இப்போது சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+