Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் முகம்.. அச்சு அசலாக வடிவமைத்த ஆய்வாளர்கள்! அசத்திய சவுதி

இவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தாலும், இவர்களின் ஆட்சி குறித்து நீண்ட வரலாற்று நூல்களையெல்லாம் விட்டுச்செல்லவில்லை. ஆனால் சில கல்வெட்டுகளில் தங்களது ஆட்சி முறை குறித்து எழுதி வைத்திருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவூதி அரேபியாவின் விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் சேர்ந்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு பெண்ணின் முகத்தை மீண்டும் உருவாக்கி அசத்தியுள்ளனர்.

சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய நகரமான 'ஹெக்ராவிலிருந்து' ஒரு சில மாதங்களுக்கு முன்னர் 69 மம்மிகளின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். பொதுவாக இங்குள்ள பாலைவனங்களில் பழங்கால எச்சங்களிலிருந்து இதுபோன்ற மம்மிகள் கண்டுபிடிக்கப்படுவது இயல்பானதுதான். இருப்பினும் மற்ற மம்மிகளை விட இது வேறுபட்டிருக்கிறது. அதாவது இந்த மம்மிகளில் உயிரியல் எச்சங்கள் அழியாமல் இருந்து வந்திருக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் இவ்வாறு அழியாமல் கிடைப்பது மிகவும் அபூர்வமான ஒன்று. எனவே இதனை கொண்டு அக்காலத்தில் மனிதர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் ஆய்வில் இறங்கினர். இந்த முயற்சியின் விளைவாக தற்போது ஒருபெண்ணின் முகம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பெண் 'நபாட்டேயர்கள்' வம்சத்தை சேர்ந்தவராவார். இவர்களது ரஜ்ஜியம் ஒரு காலத்தில் அரபு நாடுகள் முழுவதும் பரவி இருந்தது.

ஆட்சி

ஆட்சி

இவர்களது தலைநகரம்தான் பெட்ரா. இது தற்போதை ஜோர்டனின் ஒரு பகுதியாக இருக்கிறது. நாடோடிகளாக அரபு பாலைவனத்தில் சுற்றித்திரிந்த இவர்கள், பாலைவனத்தை முழுமையாக புரிந்துக்கொண்டு அதனை கிமு.90 தொடங்கி கி.பி 106 வரை ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எந்த நிலையான தெய்வத்தையும் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டங்களிலும் தங்களது தெய்வங்களை மாற்றி வந்திருக்கிறார்கள். மற்ற பழங்குடியினரை போல் அல்லாமல் இவர்கள் வீரர்களாக உருவாகினார்கள். இதனால்தான் இதர பகுதிகளை ஆட்சி செய்ய முடிந்தது.

நபாட்டேயர்கள்

நபாட்டேயர்கள்

இவர்கள் குறித்து பைபிளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆபிரகாமின் மகனான இஸ்மவேலின் வழித்தோன்றல்களான ஹீப்ரு நபாட்டேயர்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என்று ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். அடிப்படையில் இவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தாலும், இவர்களின் ஆட்சி குறித்து நீண்ட வரலாற்று நூல்களையெல்லாம் விட்டுச்செல்லவில்லை. ஆனால் சில கல்வெட்டுகளில் தங்களது ஆட்சி முறை குறித்து எழுதி வைத்திருக்கின்றனர். அதேபோல இவர்கள் காலத்தில் நாணய முறையும் கூட அமலில் இருந்திருக்கிறது.

உதவி

உதவி

இந்நிலையில் இவர்களின் உயிரியல் எச்சங்களை கொண்டு முகங்களை உருவாக்க பிரிட்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று முயன்றது. இந்த முயற்சிக்கு சவுதி அரேபியாவின் AlUla ராயல் கமிஷனால் நிதியுதவி செய்துள்ளது. ஆக இவர்கள் இருவரும் இணைந்து முதல் முறையாக 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் முகத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இது குறித்து தொல்லியல் ஆய்வு நிபுணர் லீலா சாப்மேன் கூறுகையில், "இது மிகவும் சுவாரசியமான ஒன்று. இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைத்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று எல்லோருக்குமே கேள்வி எழுந்திருக்கும்.

 பெருமை

பெருமை

தற்போது இதனை சாத்தியப்படுத்தியுள்ளோம். எங்களுக்கு தற்போது பெருமையாக இருக்கிறது. அவர்கள் உருவாக்கிய நினைவு சின்னங்கள் கம்பீரமாக நிலைத்து இருக்கும் நிலையில் நபாட்டேயர்கள் எப்படி இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. இந்நிலையில் அவர்களின் உருவங்களை மீட்டுருவாக்கம் செய்திருப்பது எங்களுக்கு பெருமைதான். நபாட்டேயர்கள் குறித்து நாங்கள் நிறைய விஷயங்கள் அறிந்திருந்தாலும், அவர்களை முழுமையாக புரிந்துகொள்ள எங்களுக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டது. இந்த தேவைகளின் ஒரு பகுதிதான் இந்த முகம் உருவாக்கம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+