Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புது டுவிஸ்ட்.. நம்ம "நெருங்கிய சொந்தம்" இவுங்கதான்.. ஒரு இனத்தையே வெளி கொண்டு வந்த மண்டை ஓடு!

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: தற்போதைய மனித குலத்திற்கு "நெருக்கமான உறவுக்கார" மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, நியாண்டர்தால் மனிதர்கள்தான், இப்போதைய மனித குலத்திற்கு நெருக்கமான மனித இனம் என்று நிலவிய கருத்தை உடைத்துள்ளது, இந்த மண்டை ஓட்டு ஆராய்ச்சி.

வடகிழக்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டை ஓடுதான் ஒரு புதிய மனித இனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

டிராகன் மேன்

டிராகன் மேன்

இந்த மனித இனத்தை ஹோமோ லாங்கி அல்லது "டிராகன் மேன்" என்று அழைக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சீனாவின் ஹார்பின்ஜியாங் மாகாணத்தில் 1930 களிலேயே இந்த மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன் தலையில் என்ன எழுதியிருந்ததோ தெரியவில்லை, உடனடியாக அந்த மண்டை ஓட்டை ஆராய்ச்சி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆம்.. ஜப்பானிய ராணுவத்திடமிருந்து பாதுகாக்க 85 ஆண்டுகளாக கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாம் அந்த மண்டை ஓடு.

ஆராய்ச்சி முடிவுகள்

ஆராய்ச்சி முடிவுகள்

பின்னர் கிணறு பகுதியை தோண்டி, 2018 இல் ஹெபீ ஜியோ பல்கலைக்கழக ஆய்வாளர்களிடம் மண்டை ஓடு ஒப்படைக்கப்பட்டது. 3 வருட ஆராய்ச்சி முடிவில், இப்போது சுவாரசிய தகவல்கள் பல வெளியாகியுள்ளன. நியாண்டல்தால் மனிதர்களை விட இந்த மண்டை ஓட்டுக்கு சொந்தக்கார மனிதர்கள்தான், இப்போதைய மனிதர்களுக்கு நெருக்கமானவர்களாம்.

நியாண்டர்தால் மனிதர்கள்

நியாண்டர்தால் மனிதர்கள்

சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் இரண்டாகப் பிரிந்துள்ளது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கியதால், நம்முடைய மனித இனமாக பரிணாம வளர்ச்சி பெற்றது. இன்னொரு பிரிவு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தங்கியதால், ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் எனப்படும் நியாண்டர்தால்களாக மாறியுள்ளது. அவர்கள் நம் முன்னோர்கள் அல்ல. ஆனால் சிறிய அளவில் கலப்பு கலப்பு இனப்பெருக்கமும் நடந்துள்ளது. அதை விட்டுவிட்டால், நியாண்டல்தால்கள் தனி குழுவாக இருந்துள்ளனர். ஓரளவுக்கு நமக்கு இணையாக பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள். ஆனால் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நியாண்டல்தால் இனம் அழிந்துவிட்டது. மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்று சூழ்நிலைக்கு ஏற்ப பொருந்திக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறது.

நெருக்கமான மனித இனம்

நெருக்கமான மனித இனம்

அதேநேரம், நியாண்டல்தால்கள்தான் நமக்கு முந்தைய நெருக்கமான மனித இனம் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், சீனாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடு பல ஆச்சரிய விஷயங்களை கொண்டு வந்துள்ளது "எங்கள் ஆய்வுகளில், நியண்டர்டால்களை விட ஹார்பின் எனப்படும் இந்த மண்டை ஓடு இனம், மிகச் சமீபத்திய தொடர்பு கொண்ட இனமாக உள்ளது," என்கிறார், இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் இணை ஆசிரியர் கிறிஸ் ஸ்ட்ரிங்கர்.

நம்மை மாதிரியே மூளை

நம்மை மாதிரியே மூளை

இந்த மண்டை ஓடு குறைந்தது 146,000 ஆண்டுகளுக்கு முந்தையதாம். இது நவீன மனிதர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு மூளை அளவு கொண்டிருக்கிறது. மண்டை ஓட்டில் மூளை அமைந்திருக்கும் இடத்தை வைத்து பார்த்தால் இப்போதைய மனிதர்களின் மூளை அளவுக்கு ஈடாகத்தான் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், பெரிய கண்கள் இருந்துள்ளன. அடர்த்தியான புருவம் இருந்திருக்க வேண்டும். வாய் இப்போதைய மனிதர்களை விட அகலமாக உள்ளது. பற்கள் பெரிதாக இருந்திருக்கின்றன. இவைதான் இப்போதைய மனிதர்களுடன் உள்ள வேறுபாடுகளாக உள்ளது.

கிழக்கு ஆசியா முக்கியத்துவம்

கிழக்கு ஆசியா முக்கியத்துவம்

இந்த மண்டை ஓடு சுமார் 50 வயதுடைய ஒரு ஆணுக்கு சொந்தமானது. "இந்த மக்கள் வேட்டையாடுபவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் நியண்டர்டால்களைக் காட்டிலும் கடுமையான குளிர் சூழலை சமாளித்ததாகத் தெரிகிறது." என்கிறார், கிறிஸ் ஸ்ட்ரிங்கர். தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், அவர்களின் கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப நிலை குறித்து விடை கிடைக்கவில்லை. ஆனால் இந்த கண்டுபிடிப்பு, மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்கக்கூடும். "கிழக்கு ஆசியாவில் சொந்த பரிணாம வரலாற்றைக் கொண்ட மூன்றாவது மனித பரம்பரை இது. மனித பரிணாம வளர்ச்சிக்கு இந்த மண்டலம் எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது" என்று ஸ்ட்ரிங்கர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+