ஏங்க.. கேட்சை விட்டா 3 சிக்ஸ் கொடுப்பீங்களா? ஷஹீன் அப்ரிடியை வறுத்த வருங்கால மாமனார் ஷாகித் அப்ரிடி
இஸ்லாமாபாத்: வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி மீது பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி கடும் கோபத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பை 2021 அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19வது ஓவரில் ஷஹீன் சரியாக பந்து வீசவில்லை என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நேற்று முன்தினம், துபாயில் டி20 உலக கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 176 ரன்களை எடுத்தது.
2வது பேட் செய்த ஆஸ்திரேலியா 19வது ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து துரத்தி பிடித்து வென்றது. பாகிஸ்தானின் உலக கோப்பை கனவு கலைந்தது.

ஷாஹித் அப்ரிடி காட்டம்
பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர பவுலர் ஷாஹீன் அப்ரிடி வீசிய 19வது ஓவரில் 3 ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார் மேத்யூ வேட். இந்த நிலையில், பாகிஸ்தானின் சாமா டிவி சேனலிடம் பேசிய ஷாஹித் அப்ரிடி, 19வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஹசன் அலி கேட்சை தவறவிட்டார் உண்மைதான். ஆனால் இதற்குப் பிறகும் ஷாஹீன் அப்ரிடி புத்திசாலித்தனமாக பந்து வீசியிருக்க வேண்டும்.

வருங்கால மாமனார்
ஷாஹித் அப்ரிடியின் மூத்த மகள் அக்சாவுக்கும் ஷாஹீன் அப்ரிடிக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. மே மாதம் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால் இப்போது வருங்கால மருமகனை வறுத்தெடுத்துள்ளார் ஷாகித் அப்ரிடி.

கேட்சை விட்டால் சிக்ஸ் கொடுப்பீங்களா
அப்ரிடி மேலும் கூறுகையில், 'ஷாஹீன் அப்ரிடி செய்த ஒரு விஷயத்தில் மகிழ்ச்சியடையவில்லை. சரி, ஹசன் அலி கேட்சை கைவிட்டார் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் மோசமாக பந்துவீசி மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்களை கொடுக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.

வேறு மாதிரி பந்தே போடவில்லை
மேத்யூ வேட் 3 பந்துகளில் 3 சிக்சர்கள் அடித்தார். ஷாஹீன் ஒரே மாதிரி பந்துகளை அவருக்கு வீசியது இதற்கு காரணம். ஷாஹீன் வைட் யார்க்கரை வீசியிருக்க வேண்டும், ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரி ஷாஹீன் வீசியிருக்க கூடாது. ஷாஹீன் அதி வேகமாக பந்து வீசக் கூடியவர். அவர் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தியிருக்க வேண்டும். கேட்சை தவறவிட்டாலும், அவர் மனதை உறுதி செய்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இந்த வேகத்தில் யார்க்கரை வீசியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட பந்துகளை மேத்யூ வேட் அடித்திருக்க முடியாது.

பாடம் கற்பார்
டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியை ஷஹீன் கொண்டு செல்ல முடியவில்லை என்றாலும், இந்த போட்டியில் இருந்து அவர் நிறைய கற்றுக் கொள்வார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. ஸ்பெல் ஆரம்பத்தில் ஷஹீனின் திறமைகள் வாசிம் அக்ரம் மற்றும் முகமது அமீர் ஆகியோருக்கு இணையாக இருக்கிறது.
Recommended Video

அடுத்த உலக கோப்பை
ஷஹீன் அப்ரிதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த கிரிக்கெட் அனுபவத்தில் இருந்து அவர் பாடம் கற்றுக் கொண்டு எதிர்காலத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன். இவ்வாறு ஷாகித் அப்ரிடி தெரிவித்தார். அடுத்த டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் 2022ல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications