கன்னத்தில் அலகு குத்தி நேர்த்திக்கடன் – தாய்லாந்தைக் கலக்கிய காய்கறித் திருவிழா!

Subscribe to Oneindia Tamil

தாய்லாந்து: தாய்லாந்தில் சீன சமூகத்தினர் சார்பில் காய்கறி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் பலபேர் அலகு குத்தி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தாய்லாந்தில் சீன சமுகத்தை சேர்ந்தவர்கள் சடங்குகளில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இதற்காக அவர்கள் ஆண்டுதோறும் காய்கறி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

அலகு குத்தி வழிபாடு:

காய்கறி திருவிழாவில் சீன சமூகத்தினர் தங்கள் கன்னங்களிலும் தோல்களிலும் அலகுகள் குத்திக்கொண்டு நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.

கத்திகள், வாள்கள்:

கன்னத்தில் கத்திகள்,வாள்கள்,குடைகள் போன்று பல விதமான தோற்றங்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.

நரகத்தில் இருந்து சொர்க்கம்:

இவர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவதால் அவர்கள் நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கத்திற்க்கு செல்வார்கள் என்று நம்புகின்றனர்.

தீய எண்ணங்கள் நீங்கும்:

மேலும், தீய எண்ணங்களில் இருந்து விடுபடவும் இந்த திருவிழாவில் அவர்கள் முகம் மற்றும் தோல்களில் அலகுகள் குத்தி கொள்கின்றனர்.

இறைச்சியை தவிர்:

சீனா காலண்டரின்படி தற்போது நடைபெறும் ஒன்பதாவது மாதத்தில் அங்கு இறைச்சியை உண்பதை தவிர்த்து முற்றிலும் காய்கறியை உணவில் சேர்த்து கொள்வதால் மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை ஆகும்.

காய்கறித் திருநாள்:

இதற்காகவே அவர்கள் இந்த மாதத்தில் காய்கறி விழாவை எடுக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+