உயிருக்கு போராடிய குழந்தை-ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று காப்பாற்றிய போலீசார்
அபுதாபி: அபுதாபியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறு குழந்தை ஒன்றை அந்நாட்டு போலீசார் ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று காப்பாற்றியுள்ளனர்.
அபுதாபி நகர போலீசார் ரோந்துப் பணிகளுக்கென நவீன ரக ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஹெலிகாப்டர்களில் உயிர் காக்கும் உபகரணங்களுடன் கூடிய முதலுதவி வசதியும் உள்ளது.
ரோந்துப் பணியின் போது சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களை இந்த ஹெலிகாப்டரில் ஏற்றி வான்வழியே வெகு விரைவாக சென்று மருத்துவமனையில் அனுமதித்து அதிக ரத்த இழப்பையும், உயிரிழப்பையும் போலீசார் தவிர்த்து வருகின்றனர்.
இதன் அடுத்தகட்டமாக, ஆபத்தில் இருக்கும் நோயாளிகளையும் இந்த ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து, உயிர் பிழைக்க வைக்கும் உன்னத சேவையையும் மனிதநேய அடிப்படையில் போலீசார் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அபுதாபியின் டெல்மா தீவுப் பகுதியில் உடல்நிலை மிகவும் மோசமாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தையை ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று அல் ரஹ்பா ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.
குற்றங்களை தடுக்க மட்டுமல்லாமல், உயிரையும் காக்கும் இவர்களின் சேவை மனப்பான்மையை அங்கு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications