10 பேரை உடல் சிதற வைத்து கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்: பதற வைக்கும் வீடியோ
காபூல்: ஆப்கானிஸ்தானில் தரையில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்து அதன் மீது 10 பேரை முழங்காலிட வைத்து குண்டுகளை வெடிக்கச் செய்து அவர்களை கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் ஷின்வாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த 10 ஆண்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அந்த 10 பேரும் நாங்கர்ஹார் மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த மாகாணத்தில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அண்மையில் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த 10 பேரின் கண்களை கட்டி ஆப்கானிஸ்தானில் உள்ள மலைப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 10 குழிகளைத் தோண்டி அதில் பத்து வெடிகுண்டுகளை புதைத்தனர். பின்னர் அந்த 10 பேரை குண்டுகள் புதைக்கப்பட்ட இடங்களில் முழங்காலிடச் செய்தனர்.
அவர் முழங்காலிட்டதும் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் அந்த 10 பேரும் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூரச் சம்பவத்தை தீவிரவாதிகள் வீடியோ எடுத்து ஜிஹாதி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக தீவிரவாதிகள் பிணையக்கைதிகளை கூண்டில் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்ற கொடூரமும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications