பாகிஸ்தானில் சுஃபி புனித தலம் அருகே 6 பேர் கழுத்து அறுத்து கொலை
கராச்சி: பாகிஸ்தானின் பெரிய நகரான கராச்சியில் உள்ள புனித தலம் அருகே 6 ஆண்கள் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடந்தனர்.
பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரான கராச்சியில் அயூப் ஷா புகாரி என்ற சுஃபி முஸ்லிம்களின் புனித தலம் உள்ளது. அந்த தலத்திற்கு அருகே 6 ஆண்கள் கழுத்து அறுத்து கொல்லப்பட்டுக் கிடந்தனர். அவர்களின் உடல்களுக்கு அருகே ரத்தக்கறை படிந்த கத்தியும், புனித தலங்களுக்கு செல்வதை நிறுத்துங்கள்- இப்படிக்கு பாகிஸ்தான் தாலிபான்கள் என்று எழுதப்பட்ட பேப்பரும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்தவர்களில் 3 பேர் அந்த தலத்தில் வேலை செய்து வந்தவர்கள். மேலும் 3 பேர் அந்த புனித தலத்திற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள். இது போன்ற புனித தலங்களில் வழிபடுவது பெரும்பாவம் என்று தாலிபான்கள் கூறி வருகின்றனர். இதனால் அண்மை காலமாக சுஃபி முஸ்லிம்களுக்கு எதிராக தாலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேரா காசி கான் நகரில் உள்ள புனித தலத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications