For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்து முன்னாள் அதிபர் மோர்ஸியின் மகன் 25 வயதில் மாரடைப்பால் மரணம்.. எகிப்து மக்கள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சின் இளைய மகன் 25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் எகிப்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி. இவர் எகிப்தில் கடந்த 2012 ஜுன் முதல் 2013 ஜூலை வரை அதிபராக பதவி வகித்தார். எகிப்தின் ராணுவ தளபதி அப்துல் பாத்தின் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராக மோர்ஸி பதவி வகித்தார்.

Son of Egypts ex-president Mohamed Morsi dies of heart attack at 25

ஆனால் ராணுவம் அவரது ஆட்சியை ஒரே ஆண்டில் கலைத்தது. புரட்சியை தூண்டியதாக கைது செய்யப்பட்ட மோர்ஸிக்கு எகிப்து நீதிமன்றம் 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி தனது 67 வயதில், கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்.

முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு 25 வயதில் அப்துல்லா மோர்ஸி என்ற இளைய மகன் இருந்தார். இந்நிலையில் அப்துல்லா மோர்ஸி புதன்கிழமை தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

பிரியா-நடேசலிங்கம் குடும்பத்திற்கு ஆதரவாக வீதிக்கு வந்த ஆஸ்திரேலிய மக்கள்! மனமிறங்குமா அரசு?பிரியா-நடேசலிங்கம் குடும்பத்திற்கு ஆதரவாக வீதிக்கு வந்த ஆஸ்திரேலிய மக்கள்! மனமிறங்குமா அரசு?

அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்துல்லா மோர்ஸியை அவரது நண்பர் உடனடியாக காரை நிறுத்தி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்த தகவலை அப்துல்லா மோர்ஸின் குடும்ப வழக்கறிஞர் அப்துல் மொனீம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் மகன் அப்துல்லா மோர்ஸி 25 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் எகிப்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
abdallah morsi son of egypts dies of heart attack at 25
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X