For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெயின் “தக்காளி திருவிழா”- வசூலாகும் கட்டணம் இந்தியப் பெண்களின் வளர்ச்சிக்கு!

Google Oneindia Tamil News

புனோல், ஸ்பெயின்: ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடந்து வரும் உலகப் புகழ் பெற்ற தக்காளித் திருவிழாவின்போது வசூலாகும் டிக்கெட் கட்டணத்தை இந்த முறை, இந்தியாவில் உள்ள ஏழைப் பெண்களின் நலனுக்காக கொடுக்கப் போகிறார்கள்.

புனோல் நகரில் ஆண்டுதோறும் இந்த தக்காளித் திருவிழா நடைபெறும். இதில் பல ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்.

பல ஆயிரம் பேர் இத்தக்காளி திருவிழாவை பார்க்க வருவார்கள்.

இந்திய பெண்கள்:

இந்திய பெண்கள்:

இந்த முறை இந்த விழாவைப் பார்க்க வருவோரிடம் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டண வசூலை இந்தியாவில் உள்ள ஏழைப் பெண்களுக்குக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனராம்.

20 ஆயிரம் பேருக்கு மட்டுமே:

20 ஆயிரம் பேருக்கு மட்டுமே:

இந்த திருவிழாவுக்கு அதிக அளவில் கூட்டம் வருவதால் நெரிசலைத் தவிர்க்க முதலில் வரும் 20ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த முறை டிக்கெட் தரப் போகிறார்களாம்.

பெண்களுக்கு சமர்ப்பணம்:

பெண்களுக்கு சமர்ப்பணம்:

இந்தியாவில் உள்ள லோக் பஞ்சாயத் என்ற அமைப்புடன் இணைந்து பணியற்றி வரும் சாஹெல் என்ற அமைப்பிடம் டிக்கெட் கட்டண வசூல் கொடுக்கப்படும். அவர்கள் இந்தியாவில் உள்ள தலித் பெண்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்துவதற்கு இதைச் செலவிடுவர்.

பாதுகாப்பு சூழல்:

பாதுகாப்பு சூழல்:

மேலும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான பணிகளுக்கும் இந்த தொகை செலவிடப்படும்.

அடக்குமுறை விழிப்புணர்வு:

அடக்குமுறை விழிப்புணர்வு:

இதற்கிடையே இந்தியாவில் தலித் பெண்கள் என்ன மாதிரியான அடக்குமுறைகளைச் சந்திக்கிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் புனோல் நகரில் நடந்து வருகிறது. இதுதொடர்பான புகைப்படக் கண்காட்சியும் அங்கு தொடங்கப்படவுள்ளது.

மோசடி செய்யப்படும் பெண்கள்:

மோசடி செய்யப்படும் பெண்கள்:

மேலும் இந்தியப் பெண்கள் எப்படியெல்லாம் மோசடி செய்யப்படுகிறார்கள் என்பது குறித்த டாக்குமென்டரிப் படமும் திரையிடப்படவுள்ளது.

வீசி விளையாடும் விழா:

வீசி விளையாடும் விழா:

இந்த தக்காளித் திருவிழாவில் கலந்து கொள்வோர், ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசி விளையாடுவதுதான் இந்த தக்காளித் திருவிழாவின் முக்கியத் தத்துவம் ஆகும்.

English summary
The world famous Tomatina festival in the Spanish town of Bunol has shown earnest solidarity with a cause that will brighten the lives of underprivileged Indian women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X