அடங்காத ஈரான்.. ஹார்முஸை மூடி கப்பல்கள் மீது ‘அட்டாக்’.. டிரம்ப் கொடுத்த வார்னிங் – பதற்றம்
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை நேற்று ஈரான் திறந்தது. ஆனால் திடீரென்று அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாக கூறி ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மூடியது. அதுமட்டுமின்றி ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்கள் மூலமாக அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அங்கிருந்து நகர்த்த ஈரான் வார்னிங் கொடுக்கிறது. ஆனால் டிரம்போ எங்களை மிரட்டி பார்க்க முடியாது. ஈரான் மிரட்டலை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளதால் ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர், இஸ்ரேல் - லெபனான் இடையேயான மோதல் உள்ளிட்டவை அடுத்தடுத்து முடிவுக்கு வந்தன. இதனால் மத்திய கிழக்கில் அமைதி திரும்ப தொடங்கியது. ஈரானும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக அறிவித்தது. இந்தியா, சீனா உள்பட சில நாடுகளுக்கு மட்டுமே திறக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி நேற்று அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் திறக்கப்பட்டது.

இதனால் அனைத்து நாடுகளும் ஹேப்பியாகின. உலகில் தினமும் நடக்கும் கச்சா எண்ணெய், கேஸ் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கும். இது மூடப்பட்டதால் பல நாடுகளும் பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் ஹேப்பியாகின. ஆனால் இந்த மகிழ்ச்சி உடனடியாக முடிவுக்கு வந்துள்ளது.
மீண்டும் மூடிய ஈரான்
அதாவது ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை இன்று திடீரென மூடுவதாக அறிவித்தது.
அதாவது ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தி உள்ளது. இந்த கப்பல்கள் பிற நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. போர்க்கப்பல்களை அங்கிருந்து திரும்ப பெற கூறியது. ஆனால் அமெரிக்கா கேட்கவில்லை. இதனால் கோபமான ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மீண்டும் மூடுவதாக அறிவித்தது.
இந்திய கப்பல் மீது தாக்குதல்
அதுமட்டுமின்றி எந்த நாட்டு வணிகக் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியில் நுழை அனுமதியில்லை. மீறினால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்தது. அதுமட்டுமின்றி பல்வேறு நாடுகளின் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'சன்மார் ஹெரால்டு' (Sanmar Herald) என்ற பிரம்மாண்ட சூப்பர் டேங்கர் மீது ஈரான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் தாக்குதலின் பின்னணி
ஈரான் - அமெரிக்கா இடையே இன்னும் பிரச்சனை வரலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்தும் தாக்குதல் என்பது அமெரிக்காவை மிரட்டும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஈரானை சுற்றி நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்களை டிரம்ப் வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக இப்படியான தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரம்ப் கொடுத்த வார்னிங்
இந்நிலையில் தான் ஈரான் செயல்பாடு பற்றி டொனால்ட் டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டொனால்ட் டிரம்ப், '' ஈரான், அமெரிக்காவை மிரட்ட வேண்டாம். ஏனென்றால் நாங்கள் அவர்களுடன் பேசி கொண்டிருக்கிறோம். பல ஆண்டுகளாக அவர்கள் செய்து வருவதை போலவே இப்போதும் நடந்து கொள்கின்றனர். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூட அவர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் எங்களை அவர்களால் மிரட்ட முடியாது'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி கப்பல்களை தாக்கி அமெரிக்காவை மிரட்ட முடியாது. அதற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்பதை டிரம்ப் வெளிக்காட்டி உள்ளார். இதனால்மீண்டும் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications