இரவில் குலுங்கிய இந்தோனேசியா.. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்
ஜகர்தா: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா பூமியின் டெக்டோனிக் தட்டுகள் நகர்வு அதிகம்கொண்ட இடத்தில் அமைந்துள்ளது. இதனால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தீவு நாடான இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அந்த நாட்டின் சுமத்ரா தீவில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பேரழிவை இந்த சுனாமி ஏற்படுத்தியது. வடக்கு சுமத்ரா கடலுக்குள் ஏற்பட்ட மிகப் பெரும் நிலநடுக்கம் அதாவது ரிக்டர் அளவில் 9.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மிக பயங்கரமான சுனாமி பேரலைகளை உருவாக்கியது.
இந்தோனேசியா தொடங்கி இந்தியா வரை மிகப் பெரும் பேரழிவுக்குள்ளாக்கியது இந்த 2004 சுனாமி. இந்த சுனாமி பேரழிவால் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் நிலைமையே என்ன என தெரியாமல் கடலோடு கடலாக கரைந்து போயினர்.
இந்த பேரழிவுக்கு பிறகு இந்தோனேசியாவில் நிலநடுக்கம் என்றாலே ஒரு வித அச்சம் தெற்காசிய நாடுகளில் ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையில், இந்தோனேசியாவில் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. இந்தோனேசியாவின் வடக்கு பபுவா மாகாணத்தில் உள்ள ஜெயபுரா நகரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின.
இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பின் அதிர்வுகள் ஏற்படும் என்றும் எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications