ஐயோ கடல், கடல்.. தன் சந்தோஷத்தை முதலாளியிடம் வெளிப்படுத்திய நாய்
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ட்ரூ ட்ரூ ஹரீஸ் பெர்க் என்பவரின் நாய் அவருடன் சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் தன் சந்தோஷத்தை வித்தியாசமான சவுண்டு விட்டு வெளிப்படுத்திய வீடியோ காட்சி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுக்கு மட்டும் அல்ல எல்லா உயிரினங்களுக்கும் உணர்ச்சிவசப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்காவை சேர்ந்த ட்ரூ ஹரீஸ் பெர்க் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது. சுற்றுலாவுக்கு தன் உரிமையாளருடன் சென்ற நாய் சந்தோஷத்தை வித்தியாசமான ஒலியின் மூலம் வெளிப்படுத்தியது.

டென்னிஸ் என்ற நாய் தனது உரிமையாளர் ட்ரூ ஹரீஸ் பெர்குடன் கடற்கரைக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தது. அவ்வாறு அவர்கள் செல்லும் பயணத்தின் பொழுது குதூகலமான அந்த நாய் வித்தியாசமான ஒலியை எழுப்பி தன் மகிழ்ச்சியை தன் உரிமையாளரிடம் வெளிப்படுத்தியது.
இதை அவர் தன் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார், அந்த வீடியோ பார்ப்போர் மனதில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. அந்த வீடியோவின் மூலம் சுற்றுலா பயணம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பிடித்த ஒன்றுதான் என்பது தெரிகிறது.












Click it and Unblock the Notifications