எட்டிப் பார்க்கும் குழந்தை.. ட்ரம்ப்புக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய ஓவியர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக அமைதி வழியில் எதிர்ப்பை காட்டுகிறது ஒரு ஓவியம். இது உலக அளவில் வைரலாகியுள்ளது.

சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் குழந்தைகள் கொண்டுவரப்படுவதாக கூறி அதை தடுக்கும் திட்டத்தை (DACA) கையில் எடுத்துள்ளார் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

Symbol of protest against US President Donald Trump

இந்த நிலையில் அண்டை நாடான மெக்சிகோ எல்லையில், வைக்கப்பட்டுள்ள 65 அடி உயர, கலைவேலைப்பாடு ஒன்று இப்போது வைரலாகியுள்ளது. இதை செய்தவர் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஓவிய கலைஞரான ஜேஆர்.

எல்லை நகரமான டெகாட் பகுதியில் இந்த ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. சுவரை தாண்டி ஒரு குழந்தை எட்டிப் பார்ப்பதை போல உள்ளது அந்த ஓவியம். ட்ரம்ப் எழுப்பும் தடை சுவரை தாண்டி குழந்தை எட்டிப் பார்ப்பதை போல உருவகப்படுத்தப்பட்டு இந்த போட்டோ வைரலாகியுள்ளது.

செல்பி எடுப்பது, அதன் அருகே குழந்தைகளை விளையாடச் செய்வது என மக்களும் அந்த கலைநயத்திற்கு நேரடி ஆதரவு அளித்து வருகிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்கு அதே இடத்தில் இந்த ஓவியம் இருக்கும்.

"நான் அகதிகளாக வரும் குழந்தைகளை பார்த்து அந்த கற்பனையில் வரைந்த ஓவியம்தான் இது. ஆனால் இப்போது ட்ரம்ப் உத்தரவுடன் இது எதேர்ச்சையாக பொருந்துவிட்டதால் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது" என்று தனது படைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி நெகிழ்கிறார் ஜேஆர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 65ft art installation of a child peering through the wall is the latest artwork that is being viewed as a symbol of protest against US President Donald Trump.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற