சிரியாவில் தற்கொலைத் தாக்குதல்: 30 பேர் பலி; 45 பேர் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர். 45 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சிரிய தலைநகர் டமாஸ்கஸ் நகரின் பிரபலமான மற்றும் கூட்டம் அதிகம் உள்ள ஹமிதியே சந்தைக்கு அருகில் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்திற்குள் ராணுவ உடையில் எந்திர துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் நுழைந்த தீவிரவாதி ஒருவர் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

Syria: Second blast in Damascus after courthouse bombing

இதில் 30 பேர் பரிதாபமாக பலியாகினர். 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று சிரியா அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இதுகுறித்து அந்நாட்டு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A second bombing rocked the Syrian capital on Wednesday, just an hour after a suicide bombing targeted the Justice Palace in central Damascus which killed over 30 persons, state TV said.
Please Wait while comments are loading...