Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐயோ.. தாலிபான்கள் தேடறாங்க.. கதறி துடிக்கும் 250 பெண் நீதிபதிகள்.. கொலைவெறி தேடுதல் வேட்டை.. ஷாக்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாட்டினை தாலிபன்கள் விதித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கனின் முக்கிய பெண் நீதிபதிகள் 220 பேர் தலைமறைவாக இருக்கிறார்களாம்.. இதில் பலருக்கு தாலிபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்..!

பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று தாலிபான்கள் வாக்குறுதி தந்திருந்தாலும்கூட, அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை..

தாலிபான்களின் பேச்சை அந்நாட்டு பெண்களும் நம்பவுமில்லை.. புதிய ஆட்சியை நிறுவியும்கூட, பெண்களுக்கு உரிய பங்களிப்பை அவர்கள் இதுவரை தராமல் உள்ளனர்.

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் இல்லை.. ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை.. திரைச்சீலை உதவியுடன் தனியாக பிரித்து அமரவைக்கப்படுகிறார்கள்.. பெரும்பாலான பணிகளில் இதைதவிர, பெரும்பாலான துறைகளில் பெண்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று அச்சம் எழுந்துள்ளது...

 பெண் நீதிபதிகள்

பெண் நீதிபதிகள்

இதில் பெண் நீதிபதிகளும் கலங்கி போயுள்ளனர்.. இதே செய்தி சில தினங்களுக்கு முன்பும் வெளியானது.. காரணம், கடந்த 20 வருட காலமாக, அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டை ஆட்சி செய்து வந்தனர்.. அதேபோல, கோர்ட் மூலம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்... இப்போது தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்..

 250 நீதிபதிகள்

250 நீதிபதிகள்

மேலும் இந்த குற்றவாளிகளுக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவிகளையும் தாலிபான்கள் தந்து வருகின்றனர்.. இதுதான் நீதிபதிகளாக பதவி வகித்த பெண்களுக்கு கிலியை தந்துள்ளது... தங்களால் ஒரு காலத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள், சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறார்கள்.. தங்களுக்கு தண்டனை வழங்கிய 250 பெண் நீதிபதிகளையும் பழிவாங்க அவர்கள் துடித்து கொண்டிருக்கிறார்களாம்..

 தாலிபான் அமைப்பு

தாலிபான் அமைப்பு

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நாட்டை விட்டு வெளியேறிய பெண் நீதிபதி ஒருவர் பதற்றத்துடன் ஏற்கனவே ஒருமுறை பேட்டி தந்திருந்தார்.. அதில், "காபூலில் என் வீடு உள்ளது.. அங்கே தாலிபான் அமைப்பை சேர்ந்த 4 பேர், வந்துள்ளனர்.. என்னைபற்றி விசாரித்துள்ளனர்.. இங்கே ஒரு பெண் நீதிபதி இருந்தாரே? அவர் எங்கே என்று கேட்டுள்ளனர்... அவர்கள் 4 பேருமே என்னால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். இதேபோல்.. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெண் நீதிபதிகளிடம் இப்போது தொடர்பு கொண்டுள்ளேன்.. அவர்களும் பயந்து போயுள்ளனர்" என்றார்.

Recommended Video

    அரங்கேறும் Taliban-களின் கொடூர தண்டனைகள் | Afghanistan Updates | Oneindia Tamil
     உயிருக்கு அச்சம்

    உயிருக்கு அச்சம்

    இப்போது விஷயம் என்னவென்றால், சுமார் 200 பெண் நீதிபதிகள் தாலிபன் ஆட்சியின்கீழ் தண்டனைக்கு பயந்து தலைமறைவாகியிருக்கிறார்களாம்.. ஆப்கனில் பெண்ணுரிமையின் முன்னோடிகள்தான் இந்த நீதிபதிகள் .. முக்கியமாக விளிம்பு நிலையில் இருந்த பெண்களுக்கு நியாயம் தேடித்தந்தவர்கள்... ஆனால், இவர்கள் உயிருக்கு பயந்து தலைமறைவாக உள்ளனர். ரகசிய இடங்களில் இருந்து சம்பந்தப்பட்ட சில பெண் நீதிபதிகள் பிபிசிக்கு பேட்டி தந்துள்ளனர். அந்த பேட்டியில் பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

     மிரட்டல்கள்

    மிரட்டல்கள்

    அதில் ஒருவர்தான் மசூமா.. பாலியல் வன்புணர்வு, கொலை உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிதான் மசூமா.. சமீபத்தில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்த குற்றவாளிகளிடமிருந்து இவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.. செல்போனுக்கும் நிறைய மிரட்டல் மெசேஜ்கள் வந்திருக்கின்றன..

     கொலையாளி

    கொலையாளி

    இதை பற்றி மசூமா சொல்லும்போது, "குற்றவாளிகளை விடுவித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்ட உடனேயே நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம்.. நான் புர்கா அணிந்து காரில் கிளம்பி நகரத்துக்கு வெளியே வந்து விட்டேன்.. நல்லவேளை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை.. மனைவியை கொடூரமாக ஒரு தாலிபன் கொன்றுவிட்டார்.. அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை நான் தந்தேன்.. அப்போது அந்த கொலையாளி என்னிடம் வந்து, நான் என் மனைவிக்கு என்ன செய்தேனோ, அதே கொடூரத்தை வெளியே வந்து நான் உனக்கு செய்வேன் என்று மிரட்டினார். தேடி பழி தீர்ப்பேன் என்று சொன்னதால், இப்படி ஓடி ஒளிகிறேன்" என்றார்.

     விதிமீறல்

    விதிமீறல்

    இதுபோல முக்கிய பெண் நீதிபதிகள் 220 பேர் தலைமறைவாக இருக்கிறார்களாம்.. இதில் பலருக்கு தாலிபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.. இதனால் இந்த நீதிபதிகளில் 6 பேர் தங்களது செல்போன் நம்பர்களையும் மாற்றி உள்ளனராம்.. தாலிபன் செய்தித் தொடர்பாளர் பிலால் கரீமீ இதை பற்றி பிபிசியிடம் சொல்லும்போது, "இதெல்லாம் சரியில்லை.. எல்லாரையும் போலவே பெண் நீதிபதிகளும் பயமின்றி வாழவேண்டும்... யாரும் அவர்களை மிரட்ட கூடாது... இதுகுறித்து எங்கள் சிறப்பு ராணுவக் குழுக்கள் விசாரித்து வருகின்றன.. விதி மீறல் ஏற்பட்டது தெரிந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+