பேஜர் தாக்குதலால் பேஜார்.. இஸ்ரேலை நிலைகுலைய வைக்கும் ஹிஸ்புல்லா! குண்டு மழை.. 3ஆம் உலகப் போரா?

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுத குழுவை குறி வைத்து பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பதில் தாக்குதல் நடத்த, விமானம், ராணுவம் என அத்தனை படைகளையும் இஸ்ரேலும் களம் இறக்கி உள்ளது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

காசாவில் பாலஸ்தீனர்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருக்கும் போராளிகள் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்ரேலுக்குள் புகுந்து அந்நாட்டு மக்களை கொன்று குவிப்பதோடு, பலரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

israel hezbollah international

அதே நேரத்தில் காசாவில் போர் காரணமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாகவும், இதில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியானதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா ஆயுத குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மின்னணு போரை இஸ்ரேல் தொடங்கியது. ஹிஸ்புல்லா அமைப்பினர் தொலை தொடர்புக்காக செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதில்லை. உளவு எச்சரிக்கை காரணமாக அவர்கள் செல்போனை பயன்படுத்துவதில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தைவானில் இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பேஜர்களை இடைமறித்த இஸ்ரேல் அதற்குள் வெடிபொருட்களை வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்களும் வாக்கி டாக்கிகளும் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதில் எட்டு பேர் பலியாகி 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டது.

இஸ்ரேல் தனது எல்லையை கடந்து விட்டது அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஹிஸ்புல்லா எச்சரித்தது. அதே நேரத்தில் இது தொடர்பாக இஸ்ரேல் எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. உலகம் முழுவதும் இந்த மின்னணு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நேரடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரு நாட்களாக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதன் காரணமாக இஸ்ரேல் வீரர்கள் பொதுமக்கள் பலியானதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் தங்கள் தரப்பு சேதத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. முதல் முறையாக நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காசாவை தொடர்ந்து லெபனான் இஸ்ரேல் இடையே நேரடி போர் மூண்டு இருக்கிறது.

தலைநகர் பெய்ரூட் மற்றும் புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. தொடர்ந்து அங்கு குண்டு மழை பொழிந்து, பல இடங்கள் தீக்கிரையாகி காட்சியளிக்கிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. காசா- இஸ்ரேல் இடையேயான போர் தற்போது, இஸ்ரேல்- லெபனான் இடையேயான போராக மாறி உள்ளது.

விமானப்படை , கப்பற்படை, ராணுவம் என அனைத்து படைகளையும் முதன்முறையாக லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் திருப்பி விட்டுள்ளது. பெய்ருட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 உயிர்ப்பலி ஏற்பட்டதாகவும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். பதிலுக்கு லெபனானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது .தற்போது இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில் மூன்றாம் உலகப் போருக்கான முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது என்கின்றனர் போர் நிபுணர்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+