For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய முதலீட்டைப் பெறுவதில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடம்: ஒபாமா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: புதிய முதலீடுகளைப் பெறுவதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளது என அந்நாட்டு அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா பேசினார். அப்போது அவர் பெண்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், பெண்கள் முன்னேறினால் தான் அமெரிக்காவும் வளர்ச்சியடையும் எனத் தெரிவித்தார்.

மேலும், புதிய முதலீடுகளைப் பெறுவதில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றிருப்பதாக ஆவர் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து அவர் தனது உரையில் தெரிவித்ததாவது:-

பொருளாதார முன்னேற்றம் :

பொருளாதார முன்னேற்றம் :

பெண்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். பெண்கள் முன்னேறினால் அமெரிக்காவும் வளர்ச்சியடையும். வணிக மந்தநிலை சீரடைந்த பிறகு அமெரிக்க பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

முதலிடம்:

முதலிடம்:

வெளிநாட்டினரின் முதலீடுகளை பெறுவதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. முதலீட்டை பெறுவதில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது.

ஆப்கன் போர்:

ஆப்கன் போர்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படை இந்தாண்டு இறுதிக்குள் வெளியேறும். இந்த இறுதியில் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர் முடிவுக்கு வரும்.

உலகத்தரக் கல்வி :

உலகத்தரக் கல்வி :

ஒவ்வொரு குழந்தைக்கும் உலகதரத்திலான கல்வி வழங்கப்படும். அமெரிக்காவின் பற்றாக்குறை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத 1.6 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஓய்விற்குப் பின் புதிய சேமிப்புத் திட்டம் :

ஓய்விற்குப் பின் புதிய சேமிப்புத் திட்டம் :

இந்த ஆண்டு குடியேற்ற சட்டமுறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். இன்று பெருபாலான தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதில்லை; சமூக பாதுகாப்பிற்காக இது சரியானதல்ல. ஓய்விற்கு பின் புதிய சேமிப்பு திட்டத்தை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

அமெரிக்கர்களின் ஆரோக்கியம் :

அமெரிக்கர்களின் ஆரோக்கியம் :

ஆஸ்துமா, புற்றுநோய், முதுகுவலி உள்ளிட்ட நோய்களால் எந்த ஒரு அமெரிக்கனும் பாதிக்கப்பட கூடாது என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக உள்ளது.

சக்தி வாய்ந்த ஓட்டுகள் :

சக்தி வாய்ந்த ஓட்டுகள் :

மக்களின் ஓட்டுக்கள் சக்தி நிறைந்ததாக இருக்க வேண்டும்; பணத்தின் அடிப்படையில் அல்லாது ஜனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும்.

சுயாட்சிக்கு ஆதரவு :

சுயாட்சிக்கு ஆதரவு :

2014ல் ஆப்கானிஸ்தான் சுயஆட்சி பொறுப்பு வகிக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கும். ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. தேசியபாதுகாப்பிற்காக தூதரக அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது.

பிறநாட்டு விஷயங்களில் தலையீடு :

பிறநாட்டு விஷயங்களில் தலையீடு :

விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அமெரிக்கா பிற நாடுகளின் விஷயங்களில் தலையிடுவதாக உலக அளவில் கருத்து ஏற்பட்டால் அது அமெரிக்க பாதுகாப்பிற்கு ஏற்றதல்ல' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The state of the Union is strong, US President Barack Obama said Tuesday in Washington, D.C. Obama went on to assert that America has surpassed China in the eyes of business leaders as the number one place to invest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X