தாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா?
பாங்காங்: தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கானின் காதலியின் 1400 நிர்வாண புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க எதிரிகளின் பழி வாங்கும் படலம் என அரசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜ்ரலாங்கான் (66). கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்த இவரது தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து இவர் மன்னராக பதவியேற்றார்.
ஏற்கெனவே 3 முறை திருமணமாகி 3 பேரையும் விவாகரத்து செய்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு தாய் ராணுவத்தில் சேர்ந்து ராயல் தாய் ராணுவ பதவியை பெற்ற பெண் சினீநாட் வோங்வாஜிரபக்தியை (35) காதலித்தார்.

தாய்லாந்து
இதையடுத்து அந்த பெண்ணை கடந்த ஆண்டு 4ஆவதாக திருமணம் செய்து கொண்டார். அது போல் தாய்லாந்து வரலாற்றிலேயே 100 ஆண்டுகளில் இல்லாத நடைமுறையாக அதிகாரப்பூர்வ காதலி எனும் பட்டத்தை சீனிநாட்டுக்கு கொடுத்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சீனிநாட், ராணியான சுதிடாவின் (41) இடத்தை கைப்பற்ற முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அழகிப்படை
இதையடுத்து சீனிநாட் சிறையிலடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒரு குற்றமும் செய்யவில்லை என கூறி விடுவிக்கப்பட்டார். பின்னர் அழகிப்படையில் சீனிநாட் சேர்த்து கொள்ளப்பட்டார். இந்த நிலையில் சீனிநாட்டின் நிர்வாண படங்கள் இங்கிலாந்து பத்திரிகைக்கு அனுப்பப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமர்சனம்
தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கானை இங்கிலாந்து பத்திரிகையில் ஆண்ட்ரூ விமர்சனம் செய்து வந்த நிலையில் அவருக்கு இந்த நிர்வாண படங்கள் மேலும் விமர்சனம் செய்ய உதவியாக இருந்தன. அது போல் தாய்லாந்து கல்வியாளரான பாவின் சச்சவல்பொங்பன் என்பவருக்கும் அந்த படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவரும் , மன்னரை விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் ஜப்பானுக்கு சென்றுவிட்டார்.

பழிவாங்கும் படலம்
இந்த நிலையில் மன்னரின் எதிரிகளான இருவருக்கு மட்டுமே சீனிநாட்டின் நிர்வாண படங்கள் அனுப்பப்பட்டுள்ளதால் இதில் ராணி சுதிடாவின் சதி இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. சீனிநாட் சிறையில் அடைக்கப்பட்டார் என நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அவர் விடுதலை செய்யப்பட்டு அழகிப் படையில் சேர்க்கப்பட்டதால் பழி வாங்கும் படலமாக ராணி இதை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சீனிநாட் எடுத்த படங்கள்
மொத்தம் 1443 படங்கள் அனுப்பப்பட்டன. அவை கடந்த 2012 முதல் 2014-ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்டவையாகும். இந்த புகைப்படங்கள் அனைத்து சீனிநாட்டால் எடுக்கப்பட்டது என்றே கூறப்படுகிறது. அவைகளில் பெரும்பாலானவை முழு நிர்வாணமாகவும் சில அரை நிர்வாணமாகவும் உள்ளன.












Click it and Unblock the Notifications