Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாய்லாந்து 10 நாள் டூரில் செம ஷாக்: ஹோட்டல் படுக்கையில் கழுத்தில் ஊர்ந்த 5 அடி கருநாகம்! நம்ப முடியல

Subscribe to Oneindia Tamil

பாங்காக் (Bangkok): தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஒரு தம்பதியினர், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் சந்தித்த ஒரு கோரமான அனுபவம் இப்போது சோஷியல் மீடியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிம்மதியாக தம்பதி தூங்கிக் கொண்டிருந்தபோது, படுக்கையில் ஒரு கருநாகம் (Black Cobra) ஊர்ந்து சென்றதைக் கண்டுள்ளனர்.. அடுத்த செகண்டே என்ன நடந்தது தெரியுமா?

தாய்லாந்தின் ஒரு பிரபலமான லாட்ஜில் ஐயன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தங்கியிருந்தனர்.. அப்போதுதான் இந்த விபரீதத்தை எதிர்கொண்டனர்.

Thailand hotel snake

தாய்லாந்து ஹோட்டல் - கழுத்தில் ஏறிய பாம்பு

நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, தன்னுடைய கழுத்தின் மீது ஏதோ குளிர்ச்சியாகவும், மென்மையாகவும் ஊர்ந்து செல்வதை ஐயன் உணர்ந்துள்ளார். ஆரம்பத்தில் அது வெறும் கனவு அல்லது பூச்சியாக இருக்கும் என்று நினைத்தாராம்.. அடுத்த சில நொடிகளில் மெல்ல கண்களைத் திறந்து பார்த்தபோது, சுமார் 5 அடி நீளம் கொண்ட ஒரு கரிய நிற நாகப்பாம்பு அவர் மீது ஊர்ந்து சென்று கொண்டிருந்ததை கண்டு ஆடிப்போயிருக்கிறார்.

பதற்றத்தில் ஏதேனும் தவறான அசைவுகளைச் செய்தால் பாம்பு கடித்துவிடும் என்பதை உணர்ந்த அவர், சில விநாடிகள் சிலையாக உறைந்து போயுள்ளார். அந்தப் பாம்பு மெல்ல மெல்ல நகர்ந்து அவர்களின் படுக்கைக்குக் கீழே சென்றது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, உடனே அவர் தனது மனைவியை எழுப்பி, ரூமை விட்டு உடனடியாக வெளியேறினார்.

நச்சுமிக்க கருநாகம்

தகவல் அறிந்து விரைந்து வந்த ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் பாம்பு பிடி வீரர்கள், அந்த ரூமை சோதனையிட்டனர். அப்போது படுக்கையின் அடியிலும், ரூமின் மூலை முடுக்கெல்லாம் தேடிய அவர்கள், ஒருவழியாக அந்த நச்சுமிக்க கருநாகத்தைப் பிடித்தனர்.

தாய்லாந்தின் தட்பவெப்பநிலை காரணமாக இத்தகைய பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி கட்டிடங்களுக்குள் நுழைவது வழக்கம் என்றாலும், ஒரு ஹோட்டல் அறையின் படுக்கையறைக்கே பாம்பு வந்தது அங்கிருந்த பாதுகாப்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

"அது என் கழுத்தில் ஊர்ந்து சென்ற அந்த நொடி, என் வாழ்நாள் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன்" என ஐயன் அந்தப் பயங்கரமான அனுபவத்தை தற்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

உஷார் - வனத்துறை அட்வைஸ்

இந்தச் சம்பவம் குறித்த போட்டோக்களும், தகவல்கள் வெளியானதிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதையடுத்து, அடர்ந்த காடுகள் அல்லது இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கும் போது ஜன்னல்கள் மற்றும் கதவுகளைச் சரியாக மூடி வைப்பதன் அவசியத்தை வனத்துறையினர் வலியுறுத்தி வருகிறார்களாம்..

அதிர்ஷ்டவசமாக இந்தத் தம்பதியினர் எந்தக் காயமுமின்றி உயிர் தப்பிய நிலையில், இந்தச் சம்பவம் "படுக்கையறையில் காத்திருந்த மரணம்" என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறதாம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+