மக்கள் விரும்பினால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தத் தயார்: தாய்லாந்து பிரதமர்
பாங்காக்: பெரும்பான்மையான மக்கள் விரும்பினால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு உடனடியாக 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தத் தயாராக இருப்பதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரக்களாக தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வீதிக்கு வந்து போராடும் கிளர்ச்சியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
சுற்றுலாத்தளமான தாய்லாந்தில் இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறையும் அபாயம் நிலவுகிறது. எனவே, போராட்டத்தை ஒடுக்க அரசு அமைதியான முறையிலும் முயற்சிகள் மேற்கொண்டு பார்த்தது.

ஆனபோதும், ஷினவத்ராவை ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கியே தீருவது என்பதில் போராட்டக்காரர்கள் உறுதிபட உள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை), ஷினவத்ராவை பதவியில் இருந்து இறக்க இறுதிக்கட்ட போராட்டம் நடத்தப்போவதாக அரசுக்கு எதிரான போராட்டக்குழு தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான சுதெப் தாவுக்சபன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று தொலைக்காட்சி மூலம் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார் பிரதமர் ஷினவத்ரா. அப்போது அவர் கூறியதாவது :-
‘நான் பதவி விலகத்தயார். பாராளுமன்றத்துக்கு 60 நாளில் தேர்தல் நடத்தவும் தயார். இதுதான் மெஜாரிட்டியான மக்களின் விருப்பம் என்றால் இதை செய்வேன். நாம் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தலாம். நாம் என்ன செய்யவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், அதன்படி செயல்படுவோம்' என்றார்.
அதே நேரத்தில், போராட்டக்காரர்கள் தனது யோசனையை நிராகரித்தால், அரசியல் நெருக்கடி நீண்டகாலத்துக்கு தொடர்ந்து விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications