For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதலையை சுற்றிவளைத்த அனகொண்டா.. திக் திக் மோதல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட் - பரபர காட்சிகள்

Google Oneindia Tamil News

பிரசிலியா: திரைப்படங்களிலும், காமிக்ஸ் புத்தகங்களில் நாம் படித்த அனகோண்டா, முதலை சண்டை ஒருவேளை நிஜமாக நடந்தால் எப்படி இருக்கும்? நம்முடைய இந்த கற்பனை கேள்விக்கான விடையை அமெரிக்காவின் இண்டியானாவை சேர்ந்த கிம் சல்லிவன் வீடியோவாக கொடுத்துள்ளார்.

Recommended Video

    முதலையை சுற்றிவளைத்த அனகொண்டா.. திக் திக் மோதல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட் - வீடியோ

    ஆமாங்க அவருடைய அனகோண்டா, முதலை சண்டை காட்சி வீடியோதான் தற்போது இணையம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

     ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன்! அப்படியே விழுங்கிய ராட்சத முதலை! கிராம மக்கள் செய்த பகீர் காரியம் ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன்! அப்படியே விழுங்கிய ராட்சத முதலை! கிராம மக்கள் செய்த பகீர் காரியம்

     அனகோண்டாக்கள்

    அனகோண்டாக்கள்

    அனகோண்டாக்கள் தென் அமெரிக்க மித வெப்பக் காடுகளில் காணப்படும் மிகப் பெரிய, நச்சுத்தன்மையற்ற போஅஸ் வகையைச் சேர்ந்த பாம்புகளாகும். இது உலகிலேயே மிகப் பெரிய, நீளமான பாம்பாகும். அதிகபட்சமாக 30 அடி நீளம், சுமார் 250 கிலோ வரை இந்த வகை பாம்புகள் வளரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. கொலம்பியா, வெனிசுலா, கினியா, ஈக்வெடார், பெரு, பொலிவியா, பிரேசில் மற்றும் டிரினிடாட் தீவுகளில் இந்த வகை பாம்புகள் பெரும்பாலும் காணப்படுகின்றன.

     உண்ணுவதில்லை

    உண்ணுவதில்லை

    இந்த அனகோண்டாக்கள் மனிதர்களை தாக்கியிருந்தாலும் நம்மை இரையாக உண்ணுவதில்லை. இதன் விருப்பமான உணவு மீண்கள், நீர் கோழிகள், ஆடுகள், குதிரைகள்தான். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்புக்கு உள்ளானதற்கான காரணம் இந்த அனகோண்டா வகை பாம்பு ஒரு முதலையை விழுங்க முயன்றதால்தான்.

     கிம் சல்லிவன் பிரேசில்

    கிம் சல்லிவன் பிரேசில்

    கடந்த செப்டம்பரில் கிம் சல்லிவன் பிரேசில் பக்கம் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஒரு அதிர்ச்சியான காட்சியை பார்த்துள்ளார். குயாபா ஆற்றின் கரையோரம் இந்த அனகோண்டா பாம்பு ஒன்று கேமன் வகை முதலையை அலேக்காக முழுங்க முயன்றுள்ளது. முதலை ஒன்றும் சாதாரணமான உயிரினமல்ல. அனகோண்டா பாம்பை போலவே இதுவும் வாழ்நாள் முழுவதும் வளரும் பண்பு கொண்டது. நீரில் இதுதான் முடிசூடா மன்னன். இந்த இரண்டு ராட்சச உயிரினங்களுக்கிடையே நடந்த போராட்டம் சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது.

     வீடியோ

    வீடியோ

    அனகோண்டா முதலையை முதலில் சுற்றி வளைத்துள்ளது. பின்னர் பிடியை இறுக்கியுள்ளது. இந்த வகை பாம்புகள் வேட்டையாடுவது இப்படிதான். இதற்கு விஷம் இருக்காது என்பதால் இறையை சுற்றி வளைத்து இறுக்கி அதை மூச்சடைக்க செய்து கொன்றுவிடும். பின்னர் பொறுமையாக அதை விழுங்கும். இந்த யுக்தியைத்தான் முதலையிடம் அனகோண்டா பயன்படுத்தியது. அதற்கான பலனும் கிடைத்தது. முதலை மூச்சடைப்பால் சிரமப்படுவது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

    மோதல்

    மோதல்

    பின்னர் பாம்பை வாயில் கவ்விக்கொண்டு முதலை தண்ணீருக்குள் சென்றுவிட்டது. நீருக்கு அடியில் பாம்பால் சுவாசிக்க முடியாது. எனவே அனகோண்டா சிரமப்பட்டுள்ளது. ஆனாலும் பிடியை விலக்கவில்லை. இதேபோல இரண்டு முறை நடந்த போது பாம்பு தனது பிடியை விட்டுக்கொடுத்துள்ளது. முதலையும் அதனை விடுவித்துள்ளது. பின்னர் இருவரும் அவரவர் வழியை பார்த்துக்கொண்டு சென்றுவிட்டனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஆப்ரிக்கா வைல்ட் லைஃப் பகிர்ந்துள்ளது.

    English summary
    What would it be like if the anaconda and crocodile fights we read about in movies and comic books actually happened? Kim Sullivan from Indiana, USA has given the answer to this imaginary question as a video. Yes, his anaconda and crocodile fight video is currently taking over the social media
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X