ஒரு பர்கருக்காக உலகப்போரே வரும்போல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பர்கரின் சரியான வடிவமைப்பு குறித்து சில நாட்களாக டிவிட்டரில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பர்கரில் எந்த இடத்தில் சீஸ் வைக்கப்பட வேண்டும், எந்த இடத்தில் இலைகளை வைக்க வேண்டும், எங்கு சிக்கன் இருக்க வேண்டும் என பெரிய அளவில் விவாதம் நடந்து வருகிறது.

மிகவும் சிறியதாக தொடங்கிய இந்த பிரச்சனையில் கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையும் தனது கருத்தை காமெடியாக சொல்லி இருந்தார். இதையடுத்து இந்த பிரச்சனை பெரிதாகி வைரல் ஆனது. அனைவரும் இது குறித்து விவாதிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் இது தற்போது பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இடையில் சண்டையாக மாறியிருக்கிறது. இதை வைத்து அனைத்து நிறுவனங்களும் தங்களது பொருட்களை விளம்பரம் செய்து வருகிறது.

பர்கர் பிரச்சனையின் ஆரம்பம்

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் 'தாமஸ் பீக்டல்' என்பவர் டிவிட்டரில் ஒரு சந்தேகத்தை கேட்டு இருந்தார். அதில் ''ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் பர்கர் எமோஜியில் சீஸ் சிக்கனுக்கு மேலே இருக்கிறது, ஆனால் கூகுள் வெளியிட்டு இருக்கும் எமோஜியில் சீஸ் கீழே இருக்கிறது இதில் எது சரியானது'' என்று கேட்டார். சாதாரணமாக கடந்து செல்லப்பட வேண்டிய கேள்வி தற்போது பெரிய பிரச்சனை ஆகி இருக்கிறது.

சுந்தர் பிச்சை காமெடி

இந்த நிலையில் இந்த டிவிட்டுக்கு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையும் தனது கருத்தை காமெடியாக சொல்லி இருக்கிறார். அதில் ''இந்த திங்கள் கிழமை எங்களுக்கு இருக்கும் எல்லா வேலைகளையும் நாங்கள் தள்ளி வைக்க போகிறோம். இந்த பர்கர் பிரச்சனை குறித்து தீவிரமாக விவாதிக்க போகிறோம். மேலிடத்தில் ஒப்புக் கொண்டால் கண்டிப்பாக உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும்'' என்று மிகவும் காமெடியாக எழுதி இருந்தார்.

சண்டை பெரிதானது

இதையடுத்து இந்த பர்கர் விவகாரம் பெரிதானது. நிறைய பேர் அதில் கருத்து கூற ஆரம்பித்தனர். சிலர் மொசில்லா பிரவுசரில் சீஸ் இல்லவே இல்லை, சாம்சங் போனில் வேறு மாதிரி இருக்கிறது. பிளாக்பெரி போனில் எப்படி இருக்கிறது என்றே தெரியவில்லை என வித விதமாக கருத்து தெரிவித்தனர். இந்தியர் ஒரு இதில் ''பேசாமல் பர்கருக்கு பதில் பிரச்சனையே இல்லாத வட பாவ் பஜ்ஜியை எமோஜியாக வைத்து இருக்கலாம்'' என்று கூறினார்.

கார்ப்ரேட்டுக்கு இடையில் சண்டை

இந்த நிலையில் இந்த பிரச்சனையை பயன்படுத்தி பிரபல மெக் டொனல்ட்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ''பர்கரில் சீஸை மேலே வைத்தாலும் நன்றாக இருக்கும், கீழே வைத்தாலும் நன்றாக இருக்கும். எப்படி இருந்தாலும் மெக் டொனல்ட்ஸ் நிறுவன பர்கர் நன்றாக இருக்கும்'' என்று வித்தியாசமாக விளம்பரம் செய்து இருந்தது.

பாட்டுக்கு எதிர் பாட்டு

இந்த நிலையில் மெக் டொனல்ட்ஸ் நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமான கே.எப்.சி நிறுவனம் இதற்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு இருக்கிறது. அதில் "ஆமா பர்கர் எப்படி சாப்பிட்டாலும் நல்ல இருக்கும். ஆனா அங்க இருக்குற மாதிரி பன் வச்சு சாப்பிடக்கூடாது எங்க கடையில் இருக்குற மாதிரி சிக்கன் மட்டும் வச்சு சாப்பிடணும்'' என்று விளம்பரம் செய்து இருந்தது.

கிங்குடா பர்கர்

இந்த நிலையில் மிகவும் பிரபலமான பர்கர் நிறுவனமான பர்கர் கிங் நிறுவனம் இவர்கள் இருவருக்கும் பதில் அளிக்கும் வகையில் பேசி இருக்கிறது. அதில் ''அங்கு ரெண்டு காமெடியன்கள் சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறப்ப இங்க ராஜா மாதிரி நான் அமைதியா இருக்கேன்'' என இருவரையும் கலாய்க்கும் வகையில் எழுதி இருக்கின்றனர்.

நடுவில் வந்த பெப்சி

இந்த நிலையில் குளிர்பான நிறுவனமான பெப்சி இந்த சண்டையில் இடையில் வந்து இருக்கிறது. அதில் அவர்கள் ''பர்கர் எங்கு வேண்டுமானாலும் வாங்குங்கள் அதற்கு சிறந்த குளிர்பானம் பெப்சி மட்டும் தான்'' என காமெடியாக எழுதி சண்டையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The burger emoji debate on Twitter has turned into a battlefield for food companies. McDonald's, KFC, Burger King and Pepsi had joined the debate.
Please Wait while comments are loading...