நீங்க பண்ணுவது மிகப் பெரிய போர் குற்றம்..ரஷ்யாவுக்கு எதிராக கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள்.. சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

கீவ் : உக்ரைனில் மரியுபோலில் அனைத்தையும் அழித்தது, குண்டுவீசி அனைவரையும் கொன்றது என இப்போது நடப்பது ஒரு மாபெரும் போர்க் குற்றமாகும் எனவும், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் கூட்டுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியதில் இருந்து, சுமார் 6.5 மில்லியன் மக்கள் நாட்டிற்குள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அதே நேரத்தில் மேலும் 3.2 மில்லியன் மக்கள் பாதுகாப்பு கருதி உடமைகளை நாட்டிலே விட்டுவிட்டு கால்நடையாகவே அருகிலுள்ள நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பெண்கள் தவிப்பு

பெண்கள் தவிப்பு

ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வதற்கான தொண்டு நிறுவனங்கள், அங்கு செல்வதற்கு போராடி வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறி உள்ளது. ஆனால் ரஷ்ய படைகளின் போர் காரணமாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அங்கு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.

ரஷ்யாவின் போர் குற்றம்

ரஷ்யாவின் போர் குற்றம்

உக்ரைனில் மரியுபோலில் அனைத்தையும் அழித்தது, குண்டுவீசி அனைவரையும் கொன்றது என இப்போது நடப்பது ஒரு மாபெரும் போர்க் குற்றமாகும் எனவும், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் கூட்டுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தில் வரும் ரஷியா மீது இன்னும் கூடுதல் பொருளாதார தடைகள் விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை செயலாளர் ஜோசப் போரெல் பேசினார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

அப்போது அவர் கூறியதாவது, "உக்ரைனில் மரியுபோலில் அனைத்தையும் அழித்தது, குண்டுவீசி அனைவரையும் கொன்றது என இப்போது நடப்பது ஒரு மாபெரும் போர்க் குற்றமாகும்" என்றார். இந்த கூட்டத்தில் பேசிய லிதுவேனியா மற்றும் அயர்லாந்தின் வெளியுறவு மந்திரிகள், "ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீதான, குறிப்பாக அதன் இலாபகரமான எரிசக்தி துறையை இலக்காகக் கொண்டு, பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

முற்றிலும் தடை

முற்றிலும் தடை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள் அவற்றின் 40% எரிவாயுவிற்கு ரஷியாவை நம்பியுள்ளன. இந்நிலையில் , ரஷிய எண்ணெயை குறிவைப்பது என்பது 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடினமான தேர்வாகும். ஆனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன், ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+