பாலஸ்தீன எதிர்ப்பு.. நெதன்யாகுவைவிட "தீவிரமானவர்".. இஸ்ரேலின் பிரதமராக போகும் பென்னட்.. பகீர் பக்கம்
டெல் அவிவ்: இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீழ்ந்துவிட்டார்.. அவரின் ஆட்சி கவிழ்ந்துவிட்டது.. இனி இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்று சிலர் நம்பிக்கொண்டு இருக்கும் நிலையில்தான்.. இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்டாலி பென்னட் பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
எதிர்க்கட்சி கூட்டணி சார்பாக அடுத்த 2 ஆண்டுக்கு இவர்தான் இஸ்ரேலின் பிரதமராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்த பின் நஃப்டாலி பென்னட்தான் இஸ்ரேலின் புதிய பிரதமர்.
பாலஸ்தீனம்தான் உலகிலேயே மிகப்பெரிய தீவிர பகுதி.. ஈரானிடம் அணு ஆயுதம் சென்றால் உலகமே அழிந்துவிடும் என்று மிக மோசமான கருத்துக்களை பேசிய அதி தீவிர வலதுசாரி தலைவர்தான் நஃப்டாலி பென்னட். பெஞ்சமின் நெதன்யாகூவிற்கே அரசியல் பாதை போட்டுக்கொடுத்த பிதாமகன்தான் நஃப்டாலி பென்னட்.

நஃப்டாலி பென்னட்
ஆம் நஃப்டாலி பென்னட் தீவிர வலதுசாரி கொள்கை கொண்டவர். இவரின் யாமினா கட்சி, தீவிர பாலஸ்தீன எதிர்ப்பும், அதி தீவிர யூத கொள்கையும் கொண்ட அமைப்பு ஆகும். குறிப்பாக பாலஸ்தீனத்தில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேல் கைப்பற்ற வேண்டும் என்று திட்டத்தை கொண்டு வந்தது, அதை அரசியல் கொள்கையாக மாற்றியது, அதை வாக்கு வாங்கியாக மாற்றியது நஃப்டாலி பென்னட்தான்.

வெஸ்ட் பேங்க்
வெஸ்ட் பேங்கை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து கொடுத்தது என்னவோ நஃப்டாலி பென்னட்டாக இருந்தாலும் அதன் பலனை அறுவடை செய்தது என்னவோ பெஞ்சமின் நெதன்யாகுதான். நஃப்டாலி பென்னட் உருவாக்கிய தீவிர வலதுசாரி வாக்கு வங்கியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அதன்மூலம் தேர்தல்களில் வென்றுதான் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் ஆனார்.

எப்படி
49 வயதான நஃப்டாலி பென்னட் பல கோடி சொத்துக்களை கொண்டவர் முன்னாள் அமைச்சர் ஆவார். அமெரிக்காவில் பிறந்த யூதர். அதோடு இவர் இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றி தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரின் தனியார் நிறுவனம் சையோடா இப்போதும் இஸ்ரேலில் பலம் வாய்ந்த குழுவாகும். நெதன்யாகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவருக்கு 2006-2008ல் ஆலோசகராக நஃப்டாலி பென்னட் இருந்தார்.

திட்டம்
பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அரசியல் திட்டங்களை போட்டுக்கொடுத்தது இவர்தான். அதன்பின் 2012ல் இவரே யாமினா எனப்படும் மிக தீவிரமான வலதுசாரி யூத கட்சியை தொடங்கினார். இதில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சியோடு கூட்டணி வைத்து மத விவகாரத்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சரவை பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார்.

கொஞ்சம்
அதே சமயம் இவர் தீவிர வலதுசாரியாக இருந்தாலும் பல மத வழிபாடு, ஒருபாலின உரிமைக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். தற்போது இரண்டு வருடம் இவர் பிரதமராக போகும் நிலையில், கூட்டணியில் பல கொள்கை கொண்ட கட்சிகள் இருப்பதால் இவர் தீவிர வலதுசாரி அரசியலை பின்பற்ற மாட்டார், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று எல்லோரையும் அனுசரித்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு அரபு கட்சிகளும் ஆதரவு தருவது குறிப்பிடத்தக்கது.

மாற்றம்
இதனால் பாலஸ்தீனம் மீது கவனம் செலுத்தாமல் இவர் பெரும்பாலும் இஸ்ரேல் பொருளாதார சரிவை மீட்பதில் கவனம் செலுத்துவார் என்கிறார்கள். இஸ்ரேலில் ஆட்சி அமைக்க 120 இடங்களில் 61ல் வெல்ல வேண்டும். கடைசி தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 31 இடங்களில் மட்டுமே வென்றது. அவரின் கூட்டணி 54 இடங்களில் வென்றது. இதையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 28 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றோடு முடிந்த நிலையில், எதிர்கட்சிகள் கூட்டணியை நேற்று உறுதி செய்துள்ளது.

டீல்
அங்கு பிரதான எதிர்க்கட்சியான யாஷ் அடிட் கட்சிதான் இந்த கூட்டணி உருவாக காரணம். எதிர்க்கட்சி கூட்டணிக்கு 66 இடங்கள் உள்ளன. நேற்று இவர்களின் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் பென்னட் 2 வருடமும், லாபிட் கடைசி 2 வருடமும் பிரதமராக இருப்பார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications