துபாய் புர்ஜ் கலிஃபாவை கேள்விபட்டிருக்கீங்களா? வளைகுடாவையே வாய் பிளக்க வைத்த இந்திய தொழில் அதிபர்!
துபாய்: அன்று மெக்கானிக்காக வளைகுடாவில் வாழ்க்கையை தொடங்கிய இந்தியர், இன்று துபாய் புர்ஜ்கலிஃபாவில் 22 வீடுகளின் உரிமையாளராக இருக்கிறார். கேரளாவில் இருந்து புறப்பட்டு வறுமையில் வாழ்வை தொடங்கிய ஜார்ஜ் நீரம்பரம்பில் (George V Nereamparambil). இன்று வளைகுடா நாடுகளில் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார்.
புர்ஜ் கலீஃபா துபாயின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. வானத்தின் உயரத்தை அளக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் அந்த வானளாவிய கட்டிடத்தில் சொத்து வைத்திருப்பது ஆடம்பரம் மட்டுமல்ல மிகப்பெரிய வெற்றியின் அடையாளங்களில் ஒன்றாக தொழில் அதிபர்களால் பார்க்கப்படுகிறது.

புர்ஜ் கலிஃபாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றாவது வாங்கிவிட வேண்டும் என இந்தியாவின் பணக்காரர்களிடையே மிகப்பெரிய ஆசை உள்ளது. இப்படி அவர்களின் அதீத ஆசையின் விளைவாக, புர்ஜ் கலீஃபாவில் உள்ள 900 அடுக்குமாடி வீடுகளில் 150 அடுக்குமாடி குடியிருப்புகளை இந்தியர்கள் தான் வைத்திருக்கிறார்கள்.
இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், புர்ஜ் கலிஃபாவில் மிக அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள் வைத்திருப்பவர் ஒரு இந்தியர் என்பதே ஆச்சர்யமான மற்றும் மகிழ்ச்சியான செய்தி. அதுவும் எப்படிப்பட்டவர் என்றால், ஒரு காலத்தில் மெக்கானிக்காகப் பணிபுரிந்த அந்த மனிதர் பின்னாளில் மிகப்பெரிய தொழில் அதிபராக மாறினார். அவர் பெயர் தான் ஜார்ஜ் நீரம்பரம்பில்.
ஒருவர் வளரும் தொழில்நுட்பங்களை முன்பே கணித்து அதற்கு தகுந்தாற் போல் தொழிலை விரிவுபடுத்தினால் அல்லது தொழிலை தொடங்கினால் மிகப்பெரிய வெற்றியாளராக உருவாக முடியும் என்பதற்கு கேரளாவின் ஜார்ஜ் வி நேரேம்பரம்பில் உதாரணம் ஆவார்.
ஜார்ஜ் கேரளாவில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். அவர் தன்னுடைய இளமைப் பருவத்தை ஆரம்பிக்கும் முன்பே வேலை செய்யத் தொடங்கிவிட்டார். 11 வயதில், அவர் தனது தந்தைக்கு விவசாயத்தில் உதவி செய்ய தொடங்கிவிட்டார். கொஞ்சம் வளர்ந்த பிறகு ஜார்ஜ் மெக்கானிக்காகவும் பணியாற்றினார்.
வளைகுடா நாடுகளுக்கு வந்தால் வாழ்வில் வசந்தம் பிறக்கும் என்றும் எல்லாரும் சொல்லவே மெக்கானிக்காக இருந்த ஜார்ஜ் 1976 இல் ஷார்ஜாவுக்கு வந்தார். அங்குதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அப்போது தான் துபாய், கத்தார் உள்பட மத்திய-கிழக்கு வளைகுடா நாடுகள் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தன. 2000க்கு பிறகு எப்படி இந்தியாவில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டது. அப்படி ஒரு வளர்ச்சி கத்தாரில் அப்போது எண்ணெய் தொழில்களால் ஏற்பட்டது.
அப்போது பலரும் பணக்கார்களாக மாறிக்கொண்டிருந்தனர். துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாலைவன பகுதிகள் என்பதால், ஏர் கண்டிஷனிங் துறையில் மிகப்பெரிய தொழில் வாய்ப்புகள் வருங்காலத்தில் உருவாகப்போகிறது என்பதை மெக்கானிக்காக இருந்த ஜார்ஜ் அறிந்து கொண்டார். அவர் படிப்படியாக வணிக யோசனையை வளர்த்து ஏசி தயாரிப்பு நிறுவனத்தை துபாயில் உருவாக்கினார். அதனை படிப்படியாக வளர்த்து GEO குழும நிறுவனங்கள் என்ற பெயரில் தொழில் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார். இதனால் வளைகுடா பிராந்தியத்தில் மிக முக்கியமான இந்திய வணிக அதிபர்களில் ஒருவராக ஜார்ஜ் நீரம்பரம்பில் (George V Nereamparambil) ஆனார்.
துபாயில் கட்டப்பட்டுள்ள புர்ஜ் கலிஃபா அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகள், துபாயின் அடையாளமாக மட்டுமல்ல, பணக்கார்களின் அடையாளங்களில் ஒன்றாக மாறத் தொடங்கியது. பல பணக்காரர்கள் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடாவது வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருந்தனர்.

இந்நிலையில் புர்ஜ் கலிஃபாவில் விலை உயர்ந்த குடியிருப்புகளை வாங்குவதற்கு ஜார்ஜிற்கு முதலில் எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்து ஆச்சர்யமான தகவல்களை பார்ப்போம். ஜார்ஜ் நீரம்பரம்பிலின் உறவினர் ஒருவர் அவரை புர்ஜ் கலீஃபாவிற்குள் நீங்கள் எல்லாம் நுழைய கூட முடியாது என்று கிண்டல் செய்திருக்கிறார்.
உடனே அதை தீவிரமாக எடுத்துக் கொண்ட ஜார்ஜ் அடுத்து என்ன செய்தார் தெரியுமா? 2010ல் அந்தக் கட்டிடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்தார். ஆனால் அவரே பின்னாளில் புர்ஜ் கலீஃபாவில் மொத்தம் 22 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கத் தொடங்கினார்.
ஜார்ஜ் தான் சம்பாதித்த பணத்தை சேமித்து வைக்கும் இடம் போல் புர்ஜ் கலிஃபா அடுக்குமாடி குடியிருப்பை மாற்றினார். ஜார்ஜின் அடுக்குமாடி குடியிருப்புகளின் சுவர்கள், கூரைகள் மற்றும் தளங்கள் தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இன்னமும்அதிகப்படியான வீடுகளை புர்ஜ் கலீஃபாவில் வாங்கவும் ஜார்ஜ் நீரம்பரம்பில் (George V Nereamparambil) தயாராக இருக்கிறாராம்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications