இது என்ன திடீருன்னு.. பாகிஸ்தான் எல்லையிலுள்ள இந்திய மாநிலங்களுக்கு போகாதீர்கள்.. கனடா வார்னிங்
ஒட்டாவா: பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருப்பதால் பாகிஸ்தான் எல்லை இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என கனடா அரசு அந்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து இருப்பதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு குடிமக்களுக்க்கு அறிவுறுத்தியுள்ளது.

செல்ல வேண்டாம்
கனடாவில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அதேபோல், கனடா நாட்டு மக்களும், சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். வெளிநாடுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் எந்தெந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.. எங்கு அச்சுறுத்தல் உள்ளது என்பது குறித்து ஓவ்வொரு நாடும் தங்கள் வெளியுறவுத்துறை அமைச்சக இணையத்தில் அறிவுறுத்தல்களை பகிர்ந்து வருகிறது.

கனடா வெளியுறவு அமைச்சகம்
அந்த வகையில், கனடா அரசு இணையத்தளத்தில் நேற்று (செப்டம்பர் 28) பயண அறிவுறுத்தல் ஒன்று அப்டேட் செய்யப்பட்டு இருந்தது. அதில், பாகிஸ்தானுடனான எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடிகள் இருக்கும் அபாயம்
இந்த பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:- கணிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு சூழல் நிலவுவதாலும் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் இருக்கும் அபாயமும் இருப்பதால் பாகிஸ்தானுடனான எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லையை ஒட்டி 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு பயணிப்பதை தவிர்த்து விட வேண்டும்.

பயணத்தை தவிர்க்க வேண்டும்
அதேபொல், நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் இந்தியா செல்லும் கனடா மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல், பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிக்குழுக்கள் அபாயம் இருப்பதால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர் மாநிலங்களுக்கும் அவசியமற்ற பயணத்தை தவிர்த்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த விழிப்புடன்
முன்னதாக கடந்த 23 ஆம் தேதி கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில், கனடாவில் சமீப காலமாக வெற்று தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு செல்லும் இந்திய மாணவர்கள் மிகுந்த கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அதேபோல், தூதரகங்களில் தங்களை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications