இது போர் அல்ல.. பழிவாங்கும் நடவடிக்கை.. சிரியா அட்டாக் குறித்து அமெரிக்கா சொன்ன பகீர் விளக்கம்
டாமாஸ்கஸ்: சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான 70க்கும் அதிகமான இடங்களில் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை அமெரிக்க போர் விமானங்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இந்நிலையில் தான் இது போருக்கான தொடக்கப்புள்ளி அல்ல. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான சிரியா அதிபராக சமீபத்தில் அகமது உசேன் அல் ஷரா பொறுப்பேற்றார். இவர் அமெரிக்கா ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். இதனை சிரியாவில் இயங்கும் பயங்கரவாதிகள் விரும்பவில்லை. குறிப்பாக, சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இங்கு உள்நாட்டு போர் சமயத்திலேயே அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். பெரும்பாலான அமெரிக்க ராணுவ வீரர்கள் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டனர். இருப்பினும் சுமார் 1,000 ராணுவ வீரர்கள் வரை தற்போது சிரியாவில் உள்ளனர். இவர்கள் சிரியாவின் ராணுவத்துடன் சேர்ந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 13ம் தேதி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட மொத்தம் 3 அமெரிக்கர்களை சுட்டு கொன்றார். இதற்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் வார்னிங் செய்தார். அதன்படி அமெரிக்கா, சிரியாவில் 70 இடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. போர் விமானங்களை பயன்படுத்தி அமெரிக்கா 100க்கும் அதிகமான குண்டுகளை 70 இடங்களில் வீசி உள்ளது. இந்த 70 இடங்களும் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாம்கள், கூடாரம், தளவாடங்கள் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி அமெரிக்கா பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டே ஹெக்சேத் தனது வலைதள பக்கத்தில், ‛‛இது போருக்கான தொடக்கப்புள்ளி அல்ல. இது பழிவாங்கல் நடவடிக்கையாகும். அமெரிக்காவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் நம் நாட்டு (அமெரிக்கா) மக்களை பாதுகாக்கும் விஷயத்தில் ஒருபோதும் தயக்கம் காட்டாது. அந்த விஷயத்தில் ஒருபோதும் பின்வாங்காது'' என்று கூறியுள்ளார்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications