1 வருடத்திற்கு பின் சுதந்திரம்.. 3 இந்திய இன்ஜினியர்களை விடுதலை செய்த தாலிபான்.. அதிரடி நடவடிக்கை!
தாலிபான் மூலம் கடத்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்களில் 3 இன்ஜினியர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காபூல்: தாலிபான் மூலம் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்களில் 3 இன்ஜினியர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பணியாற்றிக்கொண்டு இருந்த இந்திய இன்ஜினியர்கள் கடந்த 2018ம் வருடம் மே மாதம் தாலிபான்கள் மூலம் கடத்தப்பட்டனர். மொத்தம் 8 பேர் பாஹ்லான் பகுதியில் கடத்தப்பட்டனர். ஆனால் தாலிபான் அமைப்பின் எந்த பிரிவு இந்த கடத்தலை செய்தது என்று விவரம் வெளியாகவில்லை.

இதற்கு முறையாக தாலிபான் அமைப்பின் எந்த பிரிவும் உரிமை கோரவில்லை. இந்த நிலையில் இந்த 7 பேரில் ஒருவர் சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டார். மீதம் உள்ள ஆறு பேரில் 3 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
11 தாலிபான்களின் விடுதலைக்கு மாற்றாக இவர்கள் மூன்று பேரை தாலிபான் விடுதலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தாலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்களான ஷேக் அப்தூர் ரஹீம், மவ்லாவி அப்தூர் ரஷீத் ஆகியோர் உட்பட 11 தாலிபான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் இவர்களை ஆப்கான் ராணுவம் விடுதலை செய்ததா, அமெரிக்க ராணுவம் விடுதலை செய்ததா என்று தகவல் வெளியாகவில்லை. அதேபோல் தாலிபான்கள் எந்த பகுதியில் இந்த விடுதலையை செய்தனர். தாலிபான் அமைப்பின் எந்த பிரிவு இந்த சமாதான நடவடிக்கையை செய்தது என்றும் விவரம் வெளியாகவில்லை.
விடுதலை செய்யப்பட்ட இந்தியர்கள் குறித்த முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை. தாலிபான் சார்பாக விடுதலை செய்யப்பட்ட 11 தாலிபான் குறித்த அறிக்கை மட்டும் வெளியாகி உள்ளது. தாலிபான் மற்றும் அமெரிக்க அரசு இடையே சமாதான பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் இடையில் சில பிணக்கம் ஏற்பட்டது.
தற்போது 3 இந்தியர்களின் விடுதலை இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications