உலகின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யாவின் இன்றைய சோகநிலை..என்ன காரணம்! கற்றுத்தந்த பாடம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. ஒரே நாளில் 40251 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனால் கொரோனா நிலைமை கட்டுக்குள் வர சில வாரங்கள் ஆகலாம் என்ற நிலையே உள்ளது.

உலகை மோசமாக பாதித்து வரும் கொரோனா ரஷ்யாவை தற்போது ஆட்டிப்படைக்கிறது. ரஷ்யாவில் தான் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தற்போது தான் அங்கு அதிகரித்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நிலைமை கட்டுக்கடங்காமல் உள்ளது.

உலகிலேயே முதல் முதலாக கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்ததாக அறிவித்த நாடு தான் ரஷ்யா. ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

ஆனால் ரஷ்யாவில் தற்போது தினசரி உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் 40251 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1160 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் 1160 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ரஷ்யாவில் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. ரஷ்யாவில் உள்ள மக்கள் தொகையை ஒப்பிடும்போது இது மோசமான பாதிப்பு ஆகும்.

எவ்வளவு குணம்

எவ்வளவு குணம்

ரஷ்யாவில் இது வரை கொரோனா தொற்றால் 8,472,797 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7,331,424 பேர் குணம் அடைந்து விட்டனர். ரஷ்யாவில் இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதிப்புடன் 903,993 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 237,380 பேர் உயிரிழந்துள்ளனர்.

எப்போது அதிகம்

எப்போது அதிகம்

ரஷ்யாவில் மொத்தம் 14.60 கோடி என்கிற அளவில் மக்கள் தொகை உள்ளது. ரஷ்யாவில் வாழும் மக்கள் தொகையில் 10 லட்சம் பேருக்கு 1,626 பேர் என்ற அளவில் கொரோனாவால் பலியாகியுள்ளனர். ரஷ்யாவில் வாழும் மக்கள் தொகையில் 10 லட்சம் பேருக்கு 58,026 பேர் என்ற அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் ரஷ்யாவில் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

ரஷ்யா திணறல்

ரஷ்யா திணறல்

உலகில் கொரோனா பரவ தொடங்கிய போது, ரஷ்யாவில் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. முதல் அலையும் சரி, இரண்டாவது அலையும் சரி இந்த அளவிற்கு உயிரிழப்பை ரஷ்யாவில் ஏற்படுத்தவில்லை. ஆனால் மூன்றாவது அலை மிக உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

பாடம்

பாடம்

ஆனால் கொரோனா நிலைமை கட்டுக்குள் வர சில வாரங்கள் ஆகலாம் என்ற நிலையே உள்ளது. இங்கிலாந்தில் இதேபோன்றுதான் கொரானா பரவிவருகிறது. ஆனால் ரஷ்யாவில் உள்ளதுபோல் உயிரிழப்பு இல்லை. ஏனெனில் அங்கு தடுப்பூசி பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவது மிகவும் அவசியம் என்பதில் உலகிற்கு ரஷ்யா எடுத்துக்காட்டாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+