Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாபெரும் தவறு.." நாஜி வீரரை கனடா நாடாளுமன்றத்தில் கவுரவித்த ட்ரூடோ.. உலகெங்கும் எழுந்த எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடா ஏற்கனவே இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இப்போது அவர்கள் இமாலய தவறு ஒன்றைச் செய்துள்ளனர். உலகெங்கும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவில் வைத்துக் கொல்லப்பட்ட நிலையில், அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என ட்ரூடோ கூறியதே இதற்கு முக்கிய காரணம்.

 Trudeau is in huge trouble as Nazi veteran was honored in Canada parliament

இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருந்த போதிலும், தனது குற்றச்சாட்டு குறித்து எந்தவொரு ஆதாரத்தையும் பகிராமல் தொடர்ந்து கனடா குற்றஞ்சாட்டியே வருகிறது. இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கனடா: இதற்கிடையே கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ இப்போது மற்றொரு புதிய பிரச்சினையில் சிக்கியுள்ளார். அதாவது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் கனடா சென்றிருந்தார். அப்போது அவருடன் 14ஆவது வேஃபன் கிரண்டியர் பிரிவின் முன்னாள் வீரர் ஒருவரும் வந்திருந்தார். அந்த ராணுவ வீரரைக் கனடா நாடாளுமன்றத்திற்கு அழைத்து ட்ரூடோ, அங்கு வைத்து அவரை கவுரவித்தார். இதுவே சர்ச்சைக்குக் காரணம்.

முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை ஜஸ்டின் ட்ரூடோ கவுரவித்துள்ளார். இதில் என்ன சர்ச்சை என நீங்கள் கேட்கலாம். அந்த நபர் ஜெர்மனியின் நாஜி படைகளில் பணியாற்றியவர் என்பதே சர்ச்சைக்குக் காரணம். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, நாஜி ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட இந்த 14ஆவது வேஃபன் கிரண்டியர் பிரிவில் பெரும்பாலும் உக்ரேனிய இனப் பின்னணியைக் கொண்டவர்கள் இருந்தனர். அப்படி அதில் பணியாற்றிய ஒருவரை தான் ட்ரூடோ கவுரவித்துள்ளார்.

யூதர்கள்: நாஜி ஜெர்மனியில் யூதர்கள் எப்படிக் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியொரு நாஜி படையில் பணியாற்றிய ஒருவரை எப்படி நாடாளுமன்றத்திற்கு அழைத்துக் கவுரவிக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர். குறிப்பாகக் கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் இது தொடர்பாக ட்ரூடோவை கடுமையாகச் சாடினார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "உக்ரைன் அதிபர் கனடா வந்திருந்த போது நாஜி படையில் இருந்த முன்னாள் அதிகாரி நமது நாடாளுமன்றத்தில் வைத்துக் கவுரவிக்கப்பட்டுள்ளார். இது மிகப் பெரிய தவறு.. இதற்கு (கனடா) பிரதமர் அலுவலகமே பொறுப்பேற்க வேண்டும். இதுபோல வெளிநாட்டுத் தலைவர்கள், விருந்தினர்கள் வரும் போது அவர்கள் பின்னணியைப் பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் இது தடுக்கப்பட்டிருக்கும். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

கடும் எதிர்ப்பு: கனடாவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள், "இரண்டாம் உலகப் போருக்கும் காரணமாக இருந்து பல லட்சம் யூதர்களைக் கொன்று குவித்த நாஜி படையில் பணியாற்றிய முன்னாள் உக்ரைன் வீரருக்குக் கனடா நாடாளுமாறும் கௌரவப்படுத்தியுள்ளது. இதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது" என்று பதிவிட்டுள்ளனர். உலகெங்கும் இருக்கும் பல யூத அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இப்படி பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கனடா நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்டனி ரோட்டா கனடா & உலகமெங்கும் உள்ள யூத சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், நடந்த தவறுக்கு தானே முற்றிலுமாக பொறுப்பேற்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். உக்ரைன் அதிபரின் பயணத்தில் பார்வையாளர் பிரிவில் இருந்த அந்த நபரை அங்கீகரிக்கும் முடிவு தனது தனிப்பட்ட முடிவு என்றும் அவரது பின்னணி குறித்து யாருக்குமே தெரியாததால் இந்த தவறு நடந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+