துருக்கியில் பல உயிர்களை காப்பாற்றி ஹீரோவான ஜூலி.. நம்பிக்கையின் வெளிச்சமாகிய இந்திய நாய்கள் படை
துருக்கியில் பல உயிர்களை காப்பாற்றி ஹீரோவாக மாறிய ஜூலி மற்றும் ரோமியா நாய்கள். இந்திய நாய்கள் படைகள் 6 வயது சிறுமியை காப்பாற்றி உள்ளன
இஸ்தான்புல்: துருக்கியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் கடந்த மூன்று நாட்களாக சிக்கியிருந்த 6 வயது சிறுமி அதிசயமாக மீட்கப்பட்டார். இந்த சிறுமியை நமது இந்திய மோப்ப நாய்கள் இல்லை என்றால் காப்பாற்றி இருக்க முடியாது. ஆம், இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் நாய்க் குழுவின் உறுப்பினர்களான ரோமியோ மற்றும் ஜூலி ஆகிய நாய்கள் இல்லாவிட்டால் குழந்தையை கண்டுபிடித்திருக்க முடியாது என்கிறார்கள் மீட்பு படையினர்.
துருக்கியில் அடுத்தடுத்து பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி அதிசயமாக மீட்கப்பட்டார். அவரை பற்றி செய்திகள் தான் தலைப்பு செய்திகளாக இடம் பெற்றன. ஒரு பெரிய பேரழிவிற்கு மத்தியில் சிறிய நம்பிக்கையை இந்த சிறுமியின் மீட்பு விதைத்து.
ஆனால் இரண்டு இந்திய மோப்ப நாய்கள் இல்லை என்றால் அந்த சிறுமியை மீட்டிருக்க முடியாது என்கிறார்கள்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) நாய்க் குழுவின் உறுப்பினர்களான ரோமியோ மற்றும் ஜூலி, டன் கணக்கில் குப்பைகளுக்குள் கண்டறிவதில் வல்லவர்கள் அவர்களின் உதவி இல்லாமல் இருந்திருந்தால் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டிருக்க முடியாது என்கிறார்கள் பாதுகாப்பு படை அதிகாரிகள்.

6வயது சிறுமி
ரோமியோ மற்றும் ஜூலி ஆகிய நாய்களின் செயல்பாடு குறித்து ராணுவ அதிகாரி குர்மிந்தர் சிங், பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடேக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ஜூலி (நாய்) தான் நஸ்ரீனை முதலில் கண்டறிந்து நமக்கு தெரிவித்தது. ரோமியோ பின்னர் ஸ்பாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நாய்கள் கட்டிட இடிபாடு குப்பைகளுக்கு அடியில் சிறுமி புதைந்து கிடந்ததை உறுதிபடுத்தியது. சிறுமி நஸ்ரீன் மீட்கப்பட்ட பிறகு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் துருக்கியின் ஹடேயில் உள்ள இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்றார். குறிப்பாக ஜூலி என்ற பெண் நாய், உயிருடன் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, பல உயிர்களை காப்பாற்ற அணிக்கு உதவியது என்றும் குர்மிந்தர் சிங் கூறினார்.

நான்கு நாய்கள் பயணம்
இந்திய ராணுவத்தின் நாய்க் குழுவில் உள்ள லாப்ரடோர் இன நாய்கள் மோப்பம் மற்றும் மீட்புப் பணிகளில் பயிற்சி பெற்றவை. அவைகள் NDRF குழுவுடன் செவ்வாய்க்கிழமை துருக்கிக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தன. ஜூலி ரோமியோ, ஹனி, மற்றும் ராம்போ ஆகிய நான்கு நாய்கள் துருக்கிக்கு உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி அரசாங்கத்திற்கு உதவி மற்றும் மீட்புப் பணிகளை வழங்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இந்த குழு இருந்தது.

நிவாரணம்
NDRF டைரக்டர் ஜெனரல் அதுல் கர்வால், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும் போது, துருக்கியில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு தேவைக்கேற்ப மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் நாய் படைகள் உதவும் என்று கூறினார்.
கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 21,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். துருக்கி மற்றும் சிரியாவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் அழிந்து போயின.

ஆபரேஷன் தோஸ்த்
பலர் நிலநடுக்கத்தால் உடைந்த விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியை துருக்கி அரசு தீவிரமாக செய்து வருகிறது. இதேபோல் சிரியாவும் மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் உதவிகளை இந்தியா ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் செய்து வருகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கான மீட்புப் பணியாளர்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவிலிருந்து ஆறாவது விமானம் துருக்கியை சென்றடைந்துவிட்டது. இதனை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வியாழக்கிழமை அறிவித்தார்.

6வது விமானம்
இந்த ஆறாவது விமானம் அதிக மீட்புக் குழுக்கள், நாய்ப் படைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்துகளுடன் அனுப்பப்பட்டுள்ளது என்றும், இந்தியா இதுவரை 250க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் ஐந்து விமானங்கள், சிறப்பு உபகரணங்கள் மற்றும் 135 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை துருக்கிக்கு அனுப்பியுள்ளது என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications