For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துருக்கியில் 177 அடி நீள விமானத்தை கடலில் மூழ்கடித்த அதிகாரிகள்: ஏன் தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: துருக்கியில் டைவிங் செய்யும் சுற்றுலாப் பயணிகளை கவர 177 அடி நீள விமானத்தை கடலில் மூழ்கடித்துள்ளனர் அதிகாரிகள்.

துருக்கியில் கடலில் டைவிங் செய்ய வரும் சுற்றுலாப் பயணிகளை கவரவும், கடலுக்கு அடியில் செயற்கை பாறையாக இருந்து மீன்களுக்கு தஞ்சம் அளிக்கும் வகையிலும் 177 அடி நீள விமானத்தை கடலில் மூழ்கடித்துள்ளனர் அதிகாரிகள்.

விமானத்தை சில பாகங்களாக உடைத்து அதை கடலில் மூழ்கச் செய்துள்ளனர். விமான பாகங்களை கடலில் மூழ்கடிக்கும் காட்சியை சுற்றுலாப் பயணிகள் சிறு, சிறு படகுகளில் அமர்ந்து கண்டு ரசித்தனர்.

அய்தின் மாகாணாத்தில் உள்ள குசாதாசி ரிசார்ட் அருகே கடலில் விமானத்தை மூழ்கச் செய்ய இரண்டு மணிநேரம் ஆனது. விமானம் தரை தட்டிய பிறகே அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

செயற்கை பாறையாக பயன்படுத்த கடலில் மூழ்கடிக்கப்பட்ட பெரிய விமானம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அய்தின் மேயர் ஆஸ்லெம் கூறுகையில்,

குசாதாசி பகுதியை டைவிங் மையமாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள். மேலும் கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க விரும்புகிறோம். இதையடுத்து தான் விமான பாகங்களை கடலில் மூழ்கச் செய்தோம் என்றார்.

English summary
A 177 feet airbus has been sunk in the sea in Turkey to attract diving tourists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X