இந்திய மாணவர்களுக்கு ஆப்பு.. குண்டைத் தூக்கிப் போட்ட டிரம்ப்! Us ரிட்டர்ன் இல்ல.. ரிட்டர்ண்டு பை US!
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்ற நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சட்ட விரோத குடியேறிகள் என ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வந்த ஏராளமான மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் தேர்தல் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவரவர் நாடுகளுக்கே அனுப்பும் நடவடிக்கை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்ததாக இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் ராணுவ விமானத்தில் அவரவர் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் 21ம் தேதி வரை மட்டுமே 388 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் தற்போது அடுத்த அதிரடியாக அமெரிக்காவில் 320க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. அவர்களில் 50 சதவீத பேர் இந்தியர்கள் என்பது தான் அதிர்ச்சி தகவல்.
தற்போது அமெரிக்காவில் ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிற நாடுகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு மாணவர்களை கணக்கெடுக்கும் பணியை அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடங்கியது. அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வேர்ட் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றார்கள். எஃப் ஒன் விசா மூலம் அவர்கள் படித்துக் கொண்டே வேலையும் செய்கிறார்கள்.
இந்த நிலையில் செவீஸ் என்ற மாணவர் பரிமாற்ற போர்டல் வாயிலாக நான்கு மாதங்களாக பல்வேறு நாடுகளின் மாணவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் சுமார் 327 மாணவர்களின் விசாக்கள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவின் நடவடிக்கை வெளிநாட்டு மாணவர்கள் மீதான அடக்குமுறை எனவும் அதனை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் அமெரிக்கா குடியேற்ற வழக்கறிஞர்கள் அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியது.
அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் விசா ரத்து செய்யப்பட்ட 327 மாணவர்களின் சுமார் 50 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்திருக்கிறது. அடுத்ததாக சீனாவை சேர்ந்த 14 சதவீதம் மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பங்களாதேஷ், சவுத் கொரியா, நேபாள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது. செயற்கை தொழில்நுட்பம் வாயிலாக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு, பிற நாடுகளுக்கு ஆதரவாக போராடாத மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பிவிட வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியூரத் துறை செய்தி தொடர்பாளர் மார்க்கரெட் மெக்லவுட்,"அமெரிக்கவில் குடியேற்ற சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. சட்டங்களை பின்பற்றினால் வாய்ப்புகள் அள்ளி வழங்கப்படும். மீறினால் கடுமையான பின் விளைவுகளை எதிர் கொள்ள வேண்டும். சட்ட விரோதமாக தங்கி உள்ள இந்தியர்கள் அவர்களை குடும்பத்தினர் தாமாக தாயகம் திரும்ப விட வேண்டும். கடுமையான நடவடிக்கைகளை எதிர் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் அவர்களாகவே சென்று விடுவது நல்லது" என கூறி அதிர வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications