For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷார்ஜாவில் பால்கனியில் துணி காய போட தடை: மீறினால் ஃபைன் ரூ.8,000

By Siva
Google Oneindia Tamil News

ஷார்ஜா: ஷார்ஜாவில் பால்கனியில் துணியை காய வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி காய வைத்தால் அபராதம் செலுத்த வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய நகரமான ஷார்ஜாவில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் துணிகளை காய வைக்க, வீட்டில் ஆபத்தான விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பால்கனியில் பொருட்களை அடைத்து வைப்பது, துணிகளை காய வைப்பது, சாட்டிலைட் டிஷ்ஷை தொங்க விடுவது ஆகியவற்றில் எதை செய்தாலும் ரூ. 8 ஆயிரத்து 442 அபராதம் செலுத்த வேண்டும் என்று கல்ஃப் நியூஸ் தெரிவித்துள்ளது.

அரசு வருமானத்தை அதிகரிக்க அபராதம் விதிக்கவில்லை. மாறாக நகரின் அழகை காக்கவே இந்த நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் மற்றும் பண்ணைகளில் ஆபத்தான விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்க்க ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முகமது அல் காசிமி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறி வளர்த்தால் ரூ. 16. 4 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.

English summary
Sharjah government has imposed a ban to dry clothes in balcony and to have dangerous animals as pets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X