டிராபிக் பற்றி கவலையில்லை.. தமிழ்ப்பட சுமோ போல உபர் டாக்சியும் இனி வானத்தில் பறக்குமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: உபர் டாக்சி நிறுவனம் நாசாவுடன் இணைத்து பறக்கும் டாக்சிகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இறங்கி இருக்கிறது. இந்த டாக்சிகளை உருவாக்கும் முயற்சியில் அந்த நிறுவனம் இப்போதே செயல்பட துவங்கியுள்ளது.

இந்த டாக்சிகள் மூலம் சாதாரண டாக்சிகளில் பயணிப்பதைவிட மூன்று மடங்கு குறைவான நேரத்தில் பயணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த டாக்சி பயணம் எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்காது என்று கூறப்படுகிறது. பணக்கார கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த டாக்சி சேவை வழங்கப்படும்.

 புதிய பிறக்கும் டாக்சி

புதிய பிறக்கும் டாக்சி

புகழ்பெற்ற டாக்சி நிறுவனமான 'உபர் டாக்சி' தற்போது பறக்கும் டாக்சிகளி உருவாக்கும் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த திட்டத்திற்கு அந்த நிறுவனம் 'உபர் ஏர்' என்று பெயரிட்டு இருக்கிறது. இதற்காக அவர்கள் நாசா விஞ்ஞானிகளுடன் கை கோர்த்து இருக்கின்றனர். இதன்படி எதிர்காலத்தில் டாக்சிகள் தரைக்கு பதிலாக வானத்தில் வேகமாக பறக்கும்.

 எங்கு அறிமுகமாகும்

எங்கு அறிமுகமாகும்

இந்த பறக்கும் டாக்சிகள் முதல்முதலாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், டெக்சாஸ், நியூயார்க் போன்ற பகுதிகளில் முதலில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதன் பின்பாக துபாயில் அறிமுகம் ஆகும். இந்த நாடுகளில் அதிக அளவில் இருக்கும் டிராபிக் காரணமாகவே இந்த திட்டம் முதலில் இங்கு அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 இயங்கும் முறை

இயங்கும் முறை

இந்த டாக்சி அப்படியே விமானம் போலவே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதன் டேக் ஆப் மட்டும் ஹெலிகாப்டர் போல இருந்த இடத்தில் இருந்தே மேல் நோக்கி செல்லும்படி இருக்கும். இதற்காக தொடக்கத்தில் நிறைய பைலட்டுகள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். ஆனால் சில நாட்களில் பைலட்டுகளுக்கு பதிலாக ஆட்டோமேட்டிக்காக இயங்கும் படி வடிவமைக்கப்படும்.

 சாலைகளில் எப்போது வரும்

சாலைகளில் எப்போது வரும்

இந்த திட்டத்தின் பணிகள் ஏற்கனேவே தொடங்கப்பட்டுவிட்டது. 2020க்குள் வானத்தில் இந்த டாக்சிகள் செல்லும்படி வடிவமைக்கப்பட இருக்கிறது. மேலும் 2023ல் இந்த திட்டம் உலகம் முழுக்க அறிமுகக்கப்படுத்தப்பட இருக்கிறது. அதன் பின் முக்கியமாக 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் ஒலிம்பிக்கில் சாதாரண வாகனத்திற்கு பதிலாக இந்த பறக்கும் டாக்சிகளை முழுக்க முழுக்க அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Uber joins hands with NASA for UberAIR. It will develop flying taxis on sky which competitively with standard Uber journeys.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற