For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உகாண்டா: எய்ட்ஸ் நோய் பரப்பிய கொலைகார நர்ஸ்க்கு 3 ஆண்டு சிறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

உகாண்டா: உகாண்டா நாட்டில் எய்ட்ஸ் நோயை பரப்பிய நர்ஸ்க்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவை சேர்ந்தவர் ரோஸ்மேரி நமுபிரு (64). இவர் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சு ஆக பணிபுரிந்தார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

Uganda Nurse Is Jailed in HIV Transmission Case

இந்த நிலையில், அவர் 2 வயது குழந்தைக்கு ஊசி போட்டார். அதற்கு முன்னதாக தனது உடலில் அந்த ஊசியை குத்திவிட்டு அதையே குழந்தைக்கு போட்டார்.

அதை பார்த்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. எய்ட்ஸ் நோயை பரப்ப நர்சு இது போன்ற கீழ்தரமான செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதை தொடர்ந்து நர்சு ரோஸ்மேரி கைது செய்யப்பட்டார். அவரை ‘‘கொலைகார நர்சு'' என அந்நாட்டு பத்திரிகைகள் வர்ணித்து இருந்தன.

அவர்மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு எய்ட்ஸ் நோயை பரப்பியதாக கூறி நர்சு ரோஸ்மேரிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

English summary
A Ugandan court on Monday sentenced a nurse to three years in jail after finding her guilty of criminal negligence for allegedly trying to infect her patient with HIV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X