நிஜாம் கொடுத்த நிதி வழக்கு.... இந்தியாவுக்கு ரூ. 1.40 கோடி வழங்க பாக்.குக்கு யுகே. கோர்ட் உத்தரவு
லண்டன்: ஹைதராபாத் நிஜாம் கொடுத்த நிதி தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் உரிமை கோர முடியாது எனவும் இந்தியாவுக்கு வழக்கு செலவாக ரூ1.40 கோடி வழங்கவும் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரமடைந்த காலத்தில் இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட சுதேச மாகாணங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுடன் இணைந்து கொண்டன.
ஆனால் ஹைதராபாத்தை நிர்வகித்து வந்த நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்து வந்தார். அவர் பாகிஸ்தான் ஆதரவாளராகவும் செயல்பட்டு வந்தார்.

அப்போது அதாவது 1948 ஆம் ஆண்டு சுமார் (இன்றைய மதிப்பு) ரூ 9,37,90,303 பணம் இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தானுக்கான துணை தூதர் பெயரில் ஹைதராபாத் நிஜாம் சார்பில் டெபாசிட் செய்யப்பட்டது.
இந்த பணத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் உரிமை கோரி வந்தன. இது தொடர்பான வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் 67 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹைதராபாத் நிஜாமின் நிதியை பாகிஸ்தான் உரிமை கோருவதற்கான காரணம் ஏற்புடையதாக இல்லை.
அத்துடன் இந்த வழக்குக்கான செலவாக இந்தியாவுக்கு ரூ 1.40 கோடியை பாகிஸ்தான் கொடுக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications