"பிரதமர் மோடி தான் ரஷ்யாவுக்கு அழுத்தம் தரணும்.. போரை உடனடியாக நிறுத்த வேண்டும்!" உக்ரைன் கோரிக்கை
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்து வரும் சூழலில், உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் ஒரு வாரத்தைக் கடந்தும் போர் உக்கிரமாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர், 11ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போர் காரணமாக உக்ரைனில் உள்ள வெளிநாட்டினர் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் போர்
அதேநேரம் போர் 2ஆவது வாரமாகத் தொடர்வதால், இதனால் உக்ரைன், ரஷ்யா நாடுகள் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மீண்ட பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்திக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகள் இணைந்து உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா வலியுறுத்தியுள்ளார்.

டிமிட்ரோ குலேபா
நேற்றைய தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, "உக்ரைன் நாட்டின் விவசாயப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தப் போர் தொடர்ந்தால், அறுவடை செய்ய முடியாது. இது சர்வதேச மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே இந்தப் போரை இப்போதே நிறுத்துவது தான் நல்லது. இந்தப் போர் அனைவரது நலனுக்கும் எதிரானது. இந்திய மக்கள் போரை நிறுத்த தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்,

அழுத்தம் தர வேண்டும்
இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர வேண்டும். மேலும், பல புதிய கடுமையான பொருளாதாரத் தடைகளையும் ரஷ்யா மீது அறிவிக்க வேண்டும். போர் நிறுத்தத்தை அறிவித்த போதிலும், ரஷ்யா அதைக் கடைப்பிடிக்கவில்லை. இதனால் நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டினர் உட்படப் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும் வகையில் ரஷ்யா துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும்.

தேவையான நடவடிக்கை
கடந்த 30 ஆண்டுகளாக ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை நாங்கள் வரவேற்றோம். அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப இலவச ரயில்கள், சிறப்பு உதவி மையம் ஏற்பாடு செய்துள்ளோம். பல்வேறு உலக நாடுகளின் தூதரகங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். ஆனால், இந்த விஷயத்திலும் கூட ரஷ்யா அரசியல் செய்து வருகிறது.
Recommended Video

ரஷ்யா திட்டம்
இங்குள்ள வெளிநாட்டு மாணவர்கள் விஷயத்தைப் பேசி உலக நாடுகளின் அனுதாபத்தைப் பெற ரஷ்யா முயல்கிறது. இது குறித்து ரஷ்யா பொய்யான போலியான தகவல்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். அப்படி நிருத்தனாலேயே அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள். பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இது குறித்து இந்தியா, சீனா மற்றும் நைஜீரியா நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications