‛ரஷ்யாவின் முக்கிய கப்பல் கடலில் மூழ்கடிப்பு’.. வேலையை காட்ட தொடங்கிய உக்ரைன்! அதிகரிக்கும் பதற்றம்
மாஸ்கோ: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ரோந்து கப்பலை தங்களது ட்ரோன் தடம் தெரியாமல் அழித்திருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடங்கிய போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த சில நாட்களாக உக்ரைனின் பதிலடி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், இன்று ரஷ்யாவின் ரோந்து கப்பலை, உக்ரைன் தடம் தெரியாமல் அழித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், உக்ரைன் ராணுவம் இதை உறுதி செய்திருக்கிறது.

ரஷ்யாவின் கெர்ச் ஜலசந்தி அருகே, அந்நாட்டின் 'ப்ராஜெக்ட் 22160' எனும் ரோந்து கப்பல், இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஆளில்லாத படகு ஒன்று இந்த கப்பல் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்திருக்கிறது. இதில் கப்பலின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்து, ஒரு சில நிமிடங்களில் முழு கப்பலும் கடலில் மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் ஒரு ஹெலிகாப்டரும் இருந்திருக்கலாம் என்று உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
மகுரா V5 எனும் ட்ரோன் படகு இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது. உக்ரேனிய ராணுவத்தில் இருக்கும் இந்த வகை படகுகள், ரோந்துக்காகவும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கும் பயன்படுத்தப்படும். மணிக்கு 78 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த படகில் 200 கிலோ வரை வெடி பொருட்களை கொண்டு செல்ல முடியும். ஏற்கெனவே ரஷ்ய நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கப்பலை கடந்த மாதம் இந்த படகு தாக்கி அழித்திருக்கிறது.
தற்போது அழிக்கப்பட்ட'ப்ராஜெக்ட் 22160' எனும் கப்பல், ரூ.538 கோடி மதிப்புள்ளதாகும். இது ரோந்துக்கப்பல் என்று பரவலாக அறியப்பட்டாலும், கருங்கடல் பகுதியில் இக்கப்பலை மிஞ்ச ஆள் கிடையாது. அந்த அளவுக்கு தன் உள்ளே ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும். மொத்தமாக இதுபோன்று 4 கப்பல்கள்தான் ரஷ்யாவிடம் இருக்கின்றன. ஏற்கெனவே 1 கப்பல் அழிந்துவிட்டது. தற்போது இது இரண்டாவது கப்பலும் அழிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கப்பலை ரஷ்யா இழந்திருப்பது அந்நாட்டின் கடற்படைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதியன்று 'சீசர் குனிகோவ்' எனும் கப்பலை உக்ரைன் தாக்கி அழித்திருந்தது. துறைமுகங்களின் உதவியின்றி நேரடியாக கடற்கரை வரை வரும் வகையில் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. கடற்கரையில் நேரடியாக பீரங்கிகள், டாங்கிகள், ராணுவ துருப்புக்களை தரையிறக்க இவை பயன்படுத்தப்பட்டது.
இந்த கப்பலையும் ட்ரோன் மூலம் தாக்கி உக்ரைன் ராணுவம் அழித்திருந்தது. ரஷ்யா-உக்ரைன் எல்லையான கிரிமியாவின் கருங்கடல் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த வீடியோவையும் உக்ரைன் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications